2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழ். பல்கலைக்கழக மோதல்: மாணவர்கள் மூவருக்கு பிணை

George   / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் சட்ட நடவடிக்கைக்கு    உட்படுத்தப்பட்ட மாணவர் ஒன்றியத் தலைவர் சசிந்திரனின் வழக்கு விசாரணையை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதிக்கு யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வி.ரி.சிவலிங்கம் ஒத்திவைத்துள்ளார்.

கடந்த மாதம் 16ஆம் திகதி யாழ். பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின் போது, விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முரண்பாடாக மாறியிருந்தத.
இதன்போது தாக்குதலுக்கு இலக்காகிய மாணவர், 'என்னைத் தாங்கியது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர்' என அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கோப்பாய் பொலிஸார் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரைக் கைதுசெய்ய முயன்ற வேளை, மாணவர் ஒன்றியத் தலைவர் கடந்த ஜூலை மாதம் 20ஆம் திகதி நீதிமன்றில் சரணடைந்தார். விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், மேற்படி வழக்கினை நேற்றையதினம் (25) வரை ஒத்திவைத்தார்.   

குறித்த வழக்கு, நேற்று வியாழக்கிழமை (25) யாழ்.நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, கோப்பாய் பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்ட ஏனைய 3 தமிழ் மாணவர்களும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

மேற்படி வழக்கில் நேற்றையதினம் ஆஜரான 3 மாணவர்களும் தலா 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .