2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வடக்கில் காணிப்பிணக்கு அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார் ஆளுநர்

George   / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடக்கில் காணிப் பிணக்குகளே அதிகளவில் காணப்படுகின்றன என்று, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் காணிப்பிரச்சினைகள், காணிப் பயன்பாடுகள் மற்றும் மீள் குடியேற்றத்தின் தாமதங்கள் தொடர்பாக, வடமாகாண ஆளுநர் தலைமையிலான கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், நேற்று வியாழக்கிழமை (25) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் கூறியதாவது,

'வடக்கில் காணிப்பிணக்குகள் அதிகளவில் காணப்படுகின்றன. இதில், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள காணிப்பிணக்குகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இன்று 30 பேரினுடைய காணிப்பிணக்குகள் தொடர்பில், குறித்த நபர்கள் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு, அதற்கான தீர்வுகள் மேற்கொள்வதற்கு உரிய அதிகாரிகளுக்குப் பணிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்ற காணிப்பிணக்குகள் மற்றும் அரசகாணிகள், வனஇலாகாவுக்குச் சொந்தமான காணிகள், ஏனைய திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள், அரசால் வழங்கப்பட்ட காணிகள் தொடர்பாகவும்; மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பாகவும் அதற்கான தாமதங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது' என அவர் தெரிவித்தார்.

மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாகாண காணி ஆணையாளர் மற்றும் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி பூநகரி பிரதேச செயலாளர்கள் இதில் கலந்துகொண்;டிருந்தனர்.

இக்கலந்துரையாடலில் காணியற்றவர்களுக்கு காணிகளை வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .