2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சப்ரகமுவையில் இரண்டாவது ஹோட்டல் பாடசாலை

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாண சபையும் இலங்கை உல்லாசத்துறை மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனமும் இணைந்து, சப்ரகமுவ மாகாணத்தில் இரண்டாவது ஹோட்டல் பாடசாலை ஒன்றை பின்னவல ரம்புக்கன உல்லாச வலயத்தில் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

மேற்படி ஹோட்டல் பாடசாலை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் புதன்கிழமை (24) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதற்கென சப்ரகமுவ மாகான சபை 1,700 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் 2013ஆம் ஆண்டு இரத்தினபுரி புதிய நகரில் ஹோட்டல் பாடசாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ் ஹோட்டல் பாடசாலையில் 3000 மாணவர்கள் ஹோட்டல் கல்வி மற்றும் பயிற்சிகளை பெற்று கூடுதலான சம்பளத்துக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில தொழில் புரிந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், சப்ரகமுவ மாகாண வீதி அபிவிருத்தி விளையாட்டுத்துறை மற்றும் உல்லாசப் பிரயாணத்துறை அமைசர் அதுலகுமார ராகுபந்த, மாகாண சபை உறுப்பினர் அதுல அதகம, மாகாண பிரதான செயலாளர் எச்.பி.குலரத்ன, இணைப்புச் செயலாளர் ரூபிகா விக்ரமசிங்க உட்பட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X