2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தோட்ட அபிவிருத்திக்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள  தோட்டப் பிரிவுகளில் வாழும் மக்களுக்கு மலசலகூட வசதிகள் குடியிருப்பு மற்றும் வீதி உட்பட தோட்ட ஆலயங்கள் என்பவற்றை அபிவிருத்தி செய்வதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதற்கென சப்ரகமுவ மாகாண சபை 5 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

சபர்கமுவ மாகாணசபை உறுப்பினர் கணபதி இராமச்சந்திரன்,  சப்ரகமுவ மாகாண முதலமைச்சரும் மாகாண தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான மஹிபால ஹேரத்தின் கவனத்துக்கு கொண்டு வந்ததற்கமைய, மேற்படி தோட்டப் பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு மாகாண சபை நடவடிக்கைக எடுத்தள்ளது.

இதன் முதற்கட்டமாக இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள இரத்தினபுரி, பெல்மதுளை, பலாங்கொடை, எஹலியகொடை, கொலன்ன, இறக்குவானை, நிவித்திகல, களவான ஆகிய எட்டு தேர்தல் தொகுதிகளிலுமுள்ள 60 தோட்டங்களை சேர்ந்த 125 தோட்டப் பிரிவுகளில் வாழும் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு மலசலகூடங்களை அமைத்து கொடுப்பதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பில் தெளிவுப்படுத்தும் நிகழ்வு,  நேற்று வியாழக்கிழமை (25) சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தலைமையில்  மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .