2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஹெக் செய்தது யார்?

George   / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத் தளத்தை  இலங்கையில் உள்ள குழுவினர் ஹெக் செய்துள்ளதாக புலனாய்வுப் பொலிஸார் மற்றும் இலங்கை கணினி அவசர உதவிப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த 25ஆம் திகதி குறித்த இணையத்தளத்தை ஹெக் செய்து, இலங்கை இளைஞர்கள் என்ற பெயரில் அடையாளம் காணப்படாத குழுவினர் தகவலொன்றை பதிவிட்டுள்ளனர்.

இணையத்தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளதை அறிந்ததுடன் ஜனாதிபதி செயலகம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையை ஏப்ரல் மாதம் நடத்துவதாகவும் நாட்டை நிர்வகிக்க முடியாவிட்டால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதாகவும் பல்கலைக்கழக மாணவர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுப் பெற்றுக்கொடுப்பதாகவும் பிரதமரைப் பற்றியும்  ஹேக்கர் குழுவினர் பதிவிட்டுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதியின் இணையத்தளம் முதல் தடவையாக வியாழக்கிழமை ஹெக் செய்யப்பட்டதுடன் இரண்டாவது தடவையாக வெள்ளிக்கிழமையும் ஹெக் செய்யப்பட்டுள்ளது.

ஹேக் செய்யப்பட்ட சில மணி நேரங்களின் பின்னர் இணையத்தளத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக  இணைய குற்ற ஒழிப்பு ( சைபர் கிரைம்) பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X