2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

டயகம விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.புஸ்பராஜ்

நுவரெலியா மாவட்ட விவசாய காரியாலயத்தின் செயற்பாடுகள் டயகம பிரதேச விவசாயி;களுக்கு கிடைப்பதில்லையென தெரிவித்து, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அப்பகுதி விவசாயிகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதில், 50இற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுப்பட்டனர்.

நுவரெலியா மற்றும் லிந்துலை ஆகிய இடங்களில் விவசாய காரியாலயங்கள் இயங்கி வருகின்றன.
இக்காரியாலயங்கள் மூலம் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கீழ் நிர்வாகம் செய்யும் ஒவ்வொரு கிராம அதிகார பிரிவிலும் விவசாய சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்ட விவசாய காரியாலயத்தின் மூலம் வழங்கப்படும் விதை, உரம், விவசாய உபகரணங்கள் மற்றும் நிவாரண உதவிகள் அனைத்தும் கிராம விவசாய சங்கத்தின் ஊடாக பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.

ஆனால், டயகம பிரதேசத்தில் விவசாய சங்கம் இயங்குகின்ற போதிலும் மாவட்ட விவசாய காரியாலயத்தின் மூலம் வழங்கப்படும் எவ்வித உதவிகளும் இதுவரை தமக்கு கிடைப்பதில்லையென ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

இதேவேளை விவசாய சங்கத்தின் கூட்டங்கள் முறையாக நடைபெறுவதில்லையெனவும் சங்கத்தில் பல மோசடிகள் உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் டயகம பிரதேச விவசாய்களுக்கு உரிய உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பாரிய போராட்டங்களை முன்னெடுக்கபடும் என இவர்கள் ஆர்பாட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .