2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'அதிகாரங்கள் கொச்சைப்படுத்தப்படுகின்றன'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

மாகாணசபையின் அதிகாரங்கள் கொச்சைப்படுத்தப்படுகின்றன என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வு, மட்டக்களப்பு விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'மத்திய அரசின் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கு மாகாணசபையால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை முண்டியடித்துக்கொண்டு திறந்துவைக்கின்றனர். இவர்களின் இச்செயற்பாட்டை நினைத்து கவலையடைகின்றேன்

மத்திய அரசாங்கத்தில் இருக்கின்ற அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரதிஷ்;டவசமாக மத்திய அரசிலிருந்து நிதிகளை கொண்டுவந்து கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற அபிவிருத்தி வேலைகளை செய்வதை விட்டு விட்டு குண்டாச்சட்டிக்குள் இருக்கின்ற மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளைக் கொண்டு நாம் செய்யும் அந்த அபிவிருத்தி திட்டங்களை திறந்து வைப்பதற்கு அடி பிடிபடும்  மத்திய அரசின் அமைச்சர்காளக நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதை நினைத்து நாங்கள் கவலையடைகின்றோம்.

கிழக்கு மாகாணசபை நிதி ஒதுக்கீடு செய்யும் விடயங்களில் அந்த நிதிகளை நாங்கள் பக்குவமாக எந்தவித இன முரண்பாடுகள் வந்து விடாமல் இன சம நிலை என்றெல்லாம் பார்த்து நிதிகளை ஒதுக்கீடு செய்து கொண்டு போகும் நிலையில் மத்திய அரசில் இருக்கின்ற நிதிகளை எவ்வாறு கொண்டு வந்து மத்திய அரசுக்குள் வரும் அபிவிருத்தி வேலைகளை செய்வதில் மத்திய அரசின் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் என நாங்கள் வினயமாக கேட்டுக்கொள்கின்றேன்.

சனிக்கிழமையன்று(27.8.2016) அன்று நானும் எமது மாகாண சபையின் தவிசாளரும் மற்றும் மாகாண சபை உறுப்பினரும் சேர்ந்து கிழக்கு மாகாண சபைக்குட்பட்ட பொதுச் சந்தை மற்றும் பாதை மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சுக்குள் வருகின்ற விற்பணை நிலையம் ஆகியவற்றை அம்பாறை மாவட்டத்தில் திறந்து வைக்கச் சென்ற போது ஒரு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சரும் அவரது மனைவியும் எமக்கு முன்னர் அங்கு சென்று அதை திறந்து விட்டு சென்றுள்ளனர்.

இது மாகாணத்தின் அதிகாரத்தை கொச்சைப்படுத்தும் செயலாகும். மாகாணத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை கேள்விக்குட்படுத்தப்படும் விடயங்களை செய்வதை விட்டு விட்டு மத்திய அரசினால் வழங்கப்படும் நிதிகளை கொண்டு வந்து பாரிய அபிவிருத்தி திட்டங்களை செய்வற்கு மத்திய அரசிலுள்ள அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிக்க வேண்டும் என்று கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டு அந்த அதிகாரத்துக்குட்பட்ட நிதிகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருக்கின்ற ஒரு பாரிய குறைபாடாக மக்கள் மத்தியில் தெரிகின்ற ஒரு நிலை நாங்கள் காண்கின்றோம்.
இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்; பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த நாட்டில் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணவேண்டுமென்று மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையிலேயே உண்மையான அதிகாரப்பகிர்வு வழங்கப்படல் வேண்டுமென தங்களின் முழு முயற்சிகளையும் செய்து கொண்டு வரும் நிலையில் இவ்வாறான சதிகாரக் கூட்டங்கள் அவற்றினை குலைப்பதற்காக முயற்சிக்கின்றதை நாங்கள் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
அடுத்த வருடமாவது கிழக்கு மாகாண விளையாட்டுத்துறைக்கு அதிக பட்ச நிதிகளை கொண்டு வந்து இந்த விளையாட்டுத்துறையை கிழக்கு மாகாணத்தில் மேம்படுத்தி கிழக்கு மாகாணத்தை முன்னிலைப்படுத்தப்பட்ட ஒரு மாகாணமாக முழு முயற்சிகளை செய்வோம்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X