2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கல்வித்தகைமையில் ஒரு சில தளர்வுகளை ஏற்படுத்த வேண்டும்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம்

1,038 ஆசிரியர்கள் நியமனத்தில் வெறும் 103 பேரே தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இது தவறான விடயமாகும். இதனை அதிகரிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பட்டதாரி பயிலுனர்கள் மற்றும் தொழில்நுட்ப பாடவிதானத்தின் கீழ் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா தாரர்களுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு,  இன்று மஹரகமவில் அமைந்துள்ள கல்வியல் கல்லூரி கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் 103 பேர் தமிழ் மொழி மூலமாகவும் 935 பேர் சிங்கள மொழி மூலமாகவும் நியமனங்களை பெற்றுக் கொண்டனர்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

பட்டதாரி பயிலுனர்கள், டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் நியமனத்துக்கு உள்வாங்குகின்ற பொழுது, மிகவும் குறைவானவர்களே தமிழ் மொழி மூலம் உள்வாங்கப்படுகின்றார்கள். இதனை அதிகரிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

தமிழ் மொழி மூலம் ஆசிரியர்கள் நியமனத்தின்போது, கல்வித்தகைமையில் ஒரு சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அப்படி செய்தால் மாத்திரமே எமது தமிழ் மொழி மூலமாக ஆசிரியர்களை நியமிக்க முடியும்.

அதற்கான ஒரு விசேட வேலைத்திட்டத்தை கல்வி அமைச்சின் அதிகாரிகள் எதிர்காலத்தில் ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்தால் மாத்திரமே ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .