2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சு.க. வைப் பலப்படுத்தும் பொறுப்பு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் ஒப்படைப்பு

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஏ.எச்.ஏ.ஹுஸைன், வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவதற்கான பொறுப்பை   கட்சித் தலைவரும் ஜனாதிபதியுமான  மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்கவும் தன்னிடம் ஒப்படைத்துள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், 'ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாடு எதிர்வரும் 4ஆம் திகதி குருநாகலில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு தொகுதியிலிருந்தும்; சுமார் 300 பேர் படி இதில் கலந்துகொள்ளவுள்ளனர்' என்றார்.  

'ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பலமான சக்தியாக மாற்றி எதிர்காலத்தில் சகல சமூகங்களும் ஏற்கக்கூடிய கட்சியாக மாற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்தகால ஆட்சியில் ஏற்பட்ட பல்வேறுபட்ட அசௌகரியங்கள், சந்தேகங்கள் காரணமாக முஸ்லிம்கள்  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டு ஒதுங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும், தற்போது கட்சித் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அந்த சந்தேகங்களை நீக்கி அனைத்தின மக்களும் ஏற்கக்கூடிய கட்சியாக இதனை முன்னோக்கிக் கொண்டு செல்கின்றார்.

65ஆவது மாநாட்டைத் தொடர்ந்து கட்சியை பலப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கையை ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ளார். அந்த வகையில்,  கிழக்கு மாகாணத்தில் கட்சியைப் பலப்படுத்துவதற்கான பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை இலக்காக வைத்து திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் விசேட பணிகளை எனது தலைமையில் மேற்கொள்ளவுள்ளோம்.  

கிழக்கு மாகாணத்திலுள்ள சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுடன் கலந்துரையாடி கட்சியைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குருநாகலையில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டுக்கு கிழக்கு மாகாண மக்கள் கலந்துகொண்டு ஜனாதிபதிக்கு பக்கபலமாக இருக்கவேண்டும்' எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X