2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

DIMO-வுக்கு மூன்று விருதுகள்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த ஆண்டு சிங்கப்பூரின் PPan Pacificy Employer Branding Institute World HRD Congress மற்றும் Stars of the Industry Group ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டு, வர்த்தக நிறுவனங்களின் ஆசிய சம்மேளனம் ((Asian Confederation of Businesses) அமைப்பின் அங்கிகாரத்துடன் இடம்பெற்ற 7ஆவது ஆசியாவின் மிகச் சிறந்த தொழில்தருநர் தனித்துவ அடையாள விருதுகள் நிகழ்வில் மொத்தமாக மூன்று விருதுகளை Diesel & Motor Engineering PLC (DIMO)  தனதாக்கியிருந்தது.

ஆசியாவின் மிகச் சிறந்த தொழில்தருநர் தனித்துவ அடையாள விருது, பணிக்கு ஆட்சேர்ப்பில் புத்தாக்கத்துக்கான விருது மற்றும் தலைமைத்துவ அபிவிருத்தியில் மேன்மைக்கான விருது ஆகியன அவையாகும். திருமதி தில்ருக்ஷp குருகுலசூரிய (பொது முகாமையாளர் - மனித வளங்கள் பிரிவு) இந்நிகழ்வில் DIMO நிறுவனத்தின் சார்பில் கலந்துகொண்டார். தொடர்ச்சியான வெற்றிகளுடன் இணைந்த இவ்விருதுகள், மிகச் சிறந்த நடைமுறைகள் மீது தொடர்ச்சியாகக் காண்பித்து வருகின்ற அர்ப்பணிப்புடனான ஈடுபாடுக்கு சான்றாக அமைந்துள்ளன.  

தொழில்தருநர்களின் தனித்துவமான அடையாளத்துக்கு மற்றைய மனித வளத்துறை அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, மிகச் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் களமாகவும் இந்நிகழ்வு அமையப்பெற்றது.

'திறமைசாலிகளை முகாமைத்துவம் செய்தல், திறமைசாலிகளை விருத்தி செய்தல் மற்றும் திறமைசாலிகளின் புத்தாக்கம்' ஆகியவற்றுக்கு பங்களித்துக் கொண்டிருக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மிகச் சிறந்த தொழில் ரீதியான வல்லுனர்கள், Employer Branding Institute இல் அங்கம் வகிக்கின்றனர். இந்த அமைப்பு தொழிற்பாட்டு முறைக்கு மிகச் சிறந்த ஒரு உதாரணமாக அமைந்துள்ளதுடன், பல்வேறு ஆசிய நாடுகளில் தொழில்தருநர்களின் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டாடுவதற்கான தளமேடை ஒன்றை ஏற்பாடு செய்துவருகின்றது.

கடந்த ஏழு ஆண்டுகளாக தனது தொழிற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ள Employee Branding Institute ஐ வலையமைப்பு, அதன் அளவிலும் அந்தஸ்திலும் விரிவடைந்து வருவதுடன், 36க்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்த மனிதவளத் துறை முன்னோடிகள், பரிந்துரைக்கப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் மிகச் சிறந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .