2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வீடுகள் வழங்கி வைப்பு

Gavitha   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுனாமி அனர்த்தத்தால் தமது வீடுகளை இழந்தோருக்காக ரயினோ ரூஃபிங் புரொடக்ட்ஸ் நிறுவனத்தால், 2006ஆம் ஆண்டில் நிர்மாணித்து வழங்கப்பட்ட 50 வீடுகள் தற்போது நவீனமயப்படுத்தப்பட்டு, உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்கப்பட்டுள்ளது.

50 வீடுகளைக் கொண்ட இந்த கிராமம், 'ரயினோபுர' என பெயரிடப்பட்டுள்ளதுடன், மீன்பிடித்துறையை தமது பிரதான ஜீவனோபாயமாகக் கொண்ட பெரும்பாலான மக்கள் இங்கு வசித்து  வருகின்றனர்.

அவர்களின் அந்த வீடுகளில் காணப்படும் குறைபாடுகளை தேடியறிந்த ரயினோ ரூஃபிங் புரொடக்ட்ஸ் நிறுவனம், அந்த வீடுகளில் உடைந்த பகுதிகளை மீண்டும் புனரமைத்துள்ளதுடன், மின்சார இணைப்புகளில் காணப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்து, வீடுகளுக்கு வர்ணம் பூசி அலங்காரப்படுத்தும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கு மேலாக, ரயினோபுரவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சமூக மண்டபம் மற்றும் புத்த பெருமானின் சிலையும் புனருத்தாரணம் செய்யப்பட்டு அலங்கரிப்பதற்கு நிறுவனத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த செயற்திட்டம் தொடர்பில், ரயினோ ரூஃபிங் புரொடக்ட்ஸ் குழுமத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் மற்றும் இச்செயற்றிட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான பிரியந்த ஜயசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,'நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின்போது, மக்கள் வாழ்க்கையை மீள வழமைக்குக் கொண்டு வர இயலுமான நடவடிக்கைகளை ரயினோ ரூஃபிங் புரொடக்ட்ஸ் நிறுவனம் தனது சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளில் முக்கியத்துவம் வழங்கி முன்னெடுக்கிறது. இந்த 50 இல்லங்களைப் புனருத்தாரணம் செய்து நாம் வழங்குவது, இந்த சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளில் முன்னெடுக்கும் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக கருதியாகும்.

2004இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக, தெவிநுவர பிரதேசத்தில் இல்லங்களை இழந்த 50 குடும்பங்களுக்கு, தெவிநுவர, கபுகம பிரதேசத்தில் 50 வீடுகளை நிர்மாணித்து வழங்கும் நடவடிக்கையை நாம் 2006இல் முன்னெடுத்திருந்தோம். இப்பிரதேச மக்களுடன் நாம் மிக நெருங்கிய உறவை பேணி வருவதுடன் வீடுகளைக் கட்டிக்கொடுத்ததுடன், நாம் எமது செயற்பாடுகளை இடைநிறுத்தாமல், அவர்களின் குறைபாடுகளை தேடியறிந்து தொடர்ந்து பங்களிப்புகளை வழங்கி வருகிறோம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .