2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வருமான ஊக்குவிப்பு மாதம் பிரகடனம்

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மத்திய மாகாணத்தில் வருமான ஊக்குவிப்பு மாதமாக, எதிர்வரும் செப்டெம்பர் மாதம்  பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய மாகாண உள்ளூராட்சித் திணைக்களம் தெரிவித்துள்ளது .

மத்திய மாகாண முதலமைச்சரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பொறுப்பான மாகாண அமைச்சருமான சரத் ஏக்கநாயக்கவின் ஆலோசனைக்கமைய, இவ் வருமான ஊக்குவிப்பு மாதம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் புதிய வருமான வழிகளை இனம் காணுதல், உள்ளூராட்சி மன்றங்களுக்கு கிடைக்கக் கூடிய வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளுதல், வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளல், உள்ளூராட்சி மன்றங்களுக்கு வரி செலுத்துவது தொடர்பாக வியாபாரிகளுக்கும்; பொதுமக்களுக்கும் அறிவூட்டல் போன்ற பல திட்டங்கள் இம் மாதத்தில் இடம்பெற உள்ளதாக அத்திணைக்களம் மேலும் கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .