2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மேலைத்தேய வாழ்க்கைமுறைகளுக்கு சீனாவில் பூட்டு

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 30 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருத்தமற்ற நெறிமுறைகளையும் மேலைத்தேய வாழ்க்கை முறைகளையும் ஊக்குவிக்கின்ற சமூக, களிப்புச் செய்திகளைக் கட்டுப்படுத்தப் போவதாக, சீனாவின் ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சீனாவின் ஊடகங்கள், ஏற்கெனவே கடுமையான தணிக்கைக்கு உள்ளாகியுள்ள நிலையில், தற்போது அதை மேலும் அதிகப்படுத்தும் நிலைமையை இது ஏற்படுத்தியுள்ளது.

ஆளும் கம்யூனிஸக் கட்சித் தலைவர்களின் கொள்கைகளைப் பிரதிபலிக்காத ஊடகங்களைத் தணிக்கைக்குள்ளாக்குவதற்கு, ஜனாதிபதி ஸி ஜின்பிங், ஏற்கெனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளதோடு, வெளிநாடுகளால் தூண்டப்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, சமூக ஊடக இணையத்தளங்கள் மூலமாக வதந்திகளைப் பரப்புவோருக்கு, கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுகின்றன.

இந்நிலையிலேயே, சமூக, களிப்புச் செய்திகள், நடப்புச்சூழலில் காணப்படும் கொள்கைகளையும் நேர்முறையான சக்தியையும் கொண்டு காணப்பட வேண்டும் எனவும், பொருத்தமற்ற நகைச்சுவைகளையும் மேலைத்தேய வாழ்க்கைமுறைகளுக்கு வெளிப்படையான மிகு போற்றுதலையும் வெளிப்படுத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவற்றுக்கு மேலதிகமாக, நட்சத்திரங்களையும் கோடீஸ்வரர்களையும் இணையத்தளப் பிரபலங்களையும் முன்னிறுத்தக்கூடாது எனவும் ஒரே நாளில் பிரபலமாகுபவர்களையும் குடும்பப் பிரச்சினைகளையும் அதிகம் பிரபலப்படுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .