2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சம்பியனானது திருகோணமலை சென். அந்தனீஸ்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 23 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார் 

அமரர் நிக்கொலஸ் பிலிப் ஞாபகார்த்தமாக ஜோஸ் விளையாட்டுக் கழகம், 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியினை,  திருகோணமலையில் நடத்தியது. இதில் 20 கழகங்கள் பங்கு கொண்டன. இதன் இறுதிப்போட்டி, வேல்ஸ் கழகத் திடலில் அண்மையில் நடைபெற்றது.

இதில், சென். அந்தனீஸ் கழகத்தை எதிர்த்து நோமன்ஸ் கழகம் மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய சென். அந்தனீஸ் கழகம். நிர்ணியிக்கப்பட்ட 10 ஓவர்களில், மூன்று விக்கெட் இழப்புக்கு 106 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தே.சுதாகரன் (சின்னா), 25 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்து ஸ்திரமான அடித்தளத்தை சென். அந்தனீஸ் கழகத்துக்கு இட்டுக் கொடுத்தார். கெனியூட் 7 பந்துகளில், 20 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் நோமன்ஸ் கழகத்தின் சார்பில் கு.சக்திபிரணவன்,  15 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் ச.கார்த்திக் 13 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு 108 ஓட்டங்கள் என்ற வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த நோமன்ஸ் கழக வீரர்கள், நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில், நான்கு விக்கெட் இழப்புக்கு 86 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர். மூன்றாவது வீரராகக் களம்புகுந்த ப.சிவசாந்தன் 24 பந்துகளுக்கு முகம் கொடுத்து 44 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் சென். அந்தனீஸ் கழகம் சார்பில், ஃபாஹிம் 13 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதன் மூலம் இப்போட்டியில் சென். அந்தனீஸ் கழகம் 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றுச் சம்பியனாகியது.

இச்சுற்றுப்போட்டியில், மூதூர் வெஸ்ரர்ன் வொரியர்ஸ் கழகம் மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டது. இரண்டாவது வருடமாக நடத்தப்ட்ட நிக்கொலஸ் பிலிப் ஞாபகார்த்த சுற்றுப் போட்டியில் சிறந்த  துடுப்பாட்ட வீரராக 107 ஓட்டங்கள் பெற்றுக் கொண்ட ச.பானுசாந்தர் (நோமன்ஸ் கழகம்), சிறந்த பந்து வீச்சாளராக, எட்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய ச.சுபேந்தரன் (நோமன்ஸ் கழகம்), தொடரின் நாயகனாக 78 ஓட்டங்களையும விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய த.கோணேஸ்வரன் (டைனமிக் கழகம்), இறுதிப் போட்டியில, சிறந்த வீரராக சென். அந்தனீஸ் கழகத்தைச் சேர்ந்த தே.சுதாகரனும் (சின்னா) தெரிவு செய்யப்பட்டு, விருதுகள் வழங்கி கௌரவிக்கப்ட்டனர்.

புனித சூசையப்பர் கல்லூரியின் பதில் அதிபர் வணக்கத்திற்குரிய  விஜயகமலன் அல்பிரட் பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டியினைச் சிறப்பித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .