2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சம்பியனாகியது பெரியகமம் எவகிறீன் வி.க

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 30 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட லீக்கினால், லீக்கில் பதிவு செய்யப்பட்ட ‘பி’ டிவிஷன் கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட  மாபெரும் கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில், பெரியகமம் எவகிறீன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகி சாதனை படைத்தது.

அணிக்கு ஒன்பது பேர் கொண்ட விலகல் முறையிலான கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியானது, மன்னார் நானாட்டான் இலகடிப்பிட்டி சென். மேரிஸ் விளையாட்டுக் கழக  மைதானத்தில் கடந்த வாரயிறுதியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் 22 அணிகள் பங்குபற்றின.

நானாட்டான் றீகன் ஸ்டார் விளையாட்டுக் கழகமும் பெரியகமம் எவகிறீன் விளையாட்டுக் கழகமும் இறுதிப்போட்டியில்  மோதின.  போட்டி தொடங்கி முடியும் வரை இரு அணிகளும் மாறி மாறி முயற்சித்தும் கோல் எதனையும் போட முடியவில்லை.  இதனால் போட்டி முடிந்த போது 0-0 என காணப்பட்டு இறுதியில் தலா ஐந்து  பெனால்டி உதைகள் வழங்கப்பட்டன. பெனால்டி முறையில், 3-2 என்ற கோல் கணக்கில் பெரியகமம் எவகிறீன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.  

இவ்விறுதிப்போட்டியின் சிறந்த வீரராக பெரியகமம் எவகிறீன் விளையாட்டுக் கழக கோல்காப்பாளர், போட்டியின் சிறந்த வீரராகவும் தொடரின் சிறந்த வீரராக விடத்தல்தீவு புதிய யுனைற்றட் விளையாட்டுக்கழக  வீரர் சுயாட்டும் தெரிவாகி பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் சம்பியன் அணிக்கு வெற்றிக்கிண்ணமும் பணப்பரிசும் கால்பந்தும் இரண்டாம் இடத்தைப் பெற்ற அணிக்கு வெற்றிக்கிண்ணமும் பணப்பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு, பிரதம விருந்தினராக  வடமாகாண சபை உறுப்பினராகிய வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனும் ஏனைய விருந்தினர்களாக முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் மன்னார் கால்பந்தாட்ட லீக்கின் தலைவர், செயலாளர், உபதலைவர்கள், உப செயலாளர், பொருளாளர், உபபொருளாளர், சென் மேரிஸ்  விளையாட்டுக் கழக தலைவர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .