ஹொட்டலில் மிருகக்காட்சிசாலை நடத்தியவருக்கு அபராதம்
08-09-2016 04:12 PM
Comments - 0       Views - 36

காலி - அஹங்கமயிலுள்ள ஹொட்டலில் அருகி வரும் வனவிலங்குகள் சிலவற்றைச் சிறைப்படுத்திய குற்றச்சாட்டில்  கைதுசெய்யப்பட்ட ஹொட்டல் உரிமையாளருக்கு 1 இலட்சத்தி 40 ஆயிரம் ரூபாயை அபராதமாகச் செலுத்துமாறு காலி நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய, கொழும்பு வனவிலங்குப் பாதுகாப்பு காரியாலய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, மர அணில், மர அணில் குஞ்சுகள், பஞ்சவர்ணக் கிளிகள் இரண்டு, கடலாமைகள் நான்கு என்பன கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

"ஹொட்டலில் மிருகக்காட்சிசாலை நடத்தியவருக்கு அபராதம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty