2014இல் அசிட் வீச்சுத் தாக்குதல்; இன்று வீர நடை..
09-09-2016 03:38 PM
Comments - 0       Views - 442

கடந்த 2014ஆம் ஆண்டு, ரெஷ்மா குறேஸியின் மைத்துனனும் அவனது நண்பர்களும், அவள் முகத்தில் அசிட் வீச்சுத் தாக்குதல் நடத்தினர்.

ஆனால், ரெஷ்மா குறேஸி, இப்போது பிரபல மொடலாக உள்ளார்.

உலகின் மிகப் பிரபலமான பஷன் ஷோவான நியூயோர்க் பஷன் வாரத்தின் போது, மொடலாக இவர் நடந்த நிகழ்வு, உலகெங்கும் ஒளிபரப்பப்பட்டது.  

வித்தியாசமான மொடல் அழகிகளைப் பயன்படுத்தும் நிறுவனமான FTL Modal எனும் நிறுவனம், இவரை மொடல் அழகியாக மாற்றி இவருக்குப் புகழை ஈட்டிக்கொடுத்துள்ளது.

எனினும், இதற்கு முன்னரே இவர், றியா சர்மாவுடன் சாரி அணிந்து படமெடுத்துத் தன்னைப் பிரபலப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

"2014இல் அசிட் வீச்சுத் தாக்குதல்; இன்று வீர நடை.." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty