வீதியைக் கடக்க முற்பட்ட மூதாட்டி வானில் மோதி பலி
11-09-2016 10:02 AM
Comments - 0       Views - 19

வீதியைக் கடக்க முற்பட்ட மூதாட்டி வானில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். இவ்விபத்து, தணமல்வில பகுதியில், நேற்று சனிக்கிழமை (10) மாலை 3.20 க்கு இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மூதாட்டி, 61 வயதான தணமல்வில பகுதியைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய வானின் சாரதியைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

"வீதியைக் கடக்க முற்பட்ட மூதாட்டி வானில் மோதி பலி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty