2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வாடகை வாகனங்கள் அபேஸ்: பிரதான சந்தேகநபர் மாயம்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 17 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நிலையங்களில் வாடகைக்கு வாகனங்களைப் பெற்று அந்த வாகனங்களை விற்பனை செய்தும் அடகு வைத்தும் ஏமாற்றியுள்ள பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் 10கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியுடைய 21 வாகனங்களை, நீர்கொழும்பு பிராந்திய சட்டத்தை நிலை நிறுத்தும் பொலிஸ் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பாக நீர்கொழும்பு பிராந்திய சட்டத்தை நிலை நிறுத்தும் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.ஆர்.ஏ.ஜி. மனோகர தெரிவித்ததாவது,

கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கு வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நிறுவனமொன்றை நடத்திவரும் கட்டுநாயக்க, பில்லேவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர், நீர்கொழும்பு பிராந்திய சட்டத்தை நிலை நிறுத்தும் பொலிஸ் பிரிவினருக்கு முறைப்பாட்டொன்றை செய்திருந்தார்.

அவர் செய்த முறைப்பாட்டில் 'தனது நிறுவனத்தில் வாடகைக்கு பெற்ற மூன்று வாகனங்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை' குறிப்பிட்டிருந்தார்.

அதேபோன்று, வாடகைக்கு வாகனங்களை வழங்கும் இன்னொரு நிலையமொன்றன் உரிமையாளரும், காணாமல் போன ஐந்து வாகனங்கள் தொடர்பாக முறைப்பாடு செய்திருந்தது.

இவ்விரு நிறுவனங்களிலும் வாகனங்களை வாடகைக்குப் பெற்றவர், வெயாங்கொட, கஹட்டோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மத் அமானுல்லா அஹ்மத் முஸ்ரத் (வயது 36) என்பவர் எனத் தெரியவந்தது.

அவர் தற்போத தலைமறைவாகியுள்ள நிலையில், சந்தேகத்தின் பேரில் அவரது சகோதரர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும், யக்கலப் பிரதேசத்தில் வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நிறுவனமொன்றில் 10 வாகனங்களும் நிட்டம்புவ பிரதேசத்தில் வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நிறுவனமொன்றில் 3 வாகனங்களும் காணாமல் போயுள்ளன.

இந்த வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டும், வேறு நபர்களுக்கு அடகு வைக்கப்பட்ட நிலையிலும், வாடகைக்கு விடப்பட்ட நிலையிலும் நீர்கொழும்பிலும் அயற் பிரதேசங்களிலும் கைப்பற்றப்பட்டுள்ளன' என்றார்.

நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியலால் தசநாயக்கவின் ஆலோசனையின் பேரில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹனவின் வழிகாட்டலில் சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.ஆர்.ஏ. ஜி. மனோகர, பொலிஸ் பரிசோதகர்களான எம். ரஹுப், எச்.எம்.சந்தன, டெனி பெரேரா, கான்ஸ்டபிள்களான அமல், ஜயசிங்க மற்றும் சமித் ஜயசேகர ஆகியோர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

பிரதான சந்தேக தலைமறைவாகியுள்ள நிலையில் இச்சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் சிலர் கை செயயப்பட்டுள்ளதாகவும், அவர்களை மன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .