2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஏஷியன் வசமானது புவிராஜ் ஞாபகார்த்தக் கிண்ணம்

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 19 , பி.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு கோல்டன் ஈகிள் விளையாட்டுக் கழகம், தனது 28ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்திய கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், ஏஷியன் விளையாட்டுக் கழகம், ஆறு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புவிராஜ் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்தையும் 30,000 ரூபாய் பெறுமதியான பணப்பரிசையும் அனைத்து வீரர்களுக்குமான ஞாபகச் சின்னங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கோல்டன் ஈகிள் விளையாட்டுக்கழகம், தனது 28ஆவது ஆண்டு நிறைவையொட்டியும் தமது முன்னாள் கிரிக்கெட் வீரரான காலஞ்சென்ற புவிராஜின் 13ஆவது ஆண்டு ஞாபகார்த்தமாகவும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி 2016ஐ செப்டெம்பர் 16, 17, 18ஆம் திகதிகளில் வெகு விமரிசையாக இருதயபுரம் கோல்டன் ஈகிள் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இத்தொடரில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 26 அணிகள் கலந்து கொண்டன.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினரான ஞா.சிறிநேசன், கௌரவ அதிதியாக மாகாணசபை உறுப்பினரும் கிழக்குமாகாண சபை பிரதித் தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு இப்போட்டியை சிறப்பித்ததுடன் வெற்றி கிண்ணங்களையும் வழங்கி வைத்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்ற இறுதிச் சுற்றுப்போட்டியில், டிஸ்கோ அணியினரை எதிர்த்தாடிய ஏஷியன் விளையாட்டுக் கழகம், ஆறு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், புவிராஜ் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்தையும் முதலாம் இடத்துக்கான வெற்றிக் கிண்ணத்தையும் 30,000 ரூபாய் பெறுமதியான பணப்பரிசையும் அனைத்து வீரர்களுக்குமான ஞாபகச் சின்னங்களையும் பெற்றுக்கொண்டனர். 

இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்ட டிஸ்கோ அணியினர் வெற்றிக் கிண்ணத்தையும், 15,000 ரூபாய் பெறுமதியான பணப்பரிசையும் பெற்றதுடன், மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்ட கோட்டமுனை அணியினர் வெற்றிக் கிண்ணத்தையும் 7000 ரூபாய் பெறுமதியான பணப்பரிசையும் பெற்றதோடு, நான்காமிடத்தை பெற்ற சஸ்ரைன் அணியினர்  வெற்றிக் கிண்ணத்தையும்,  5000 ரூபாய் பெறுமதியான பணப்பரிசையும் பெற்றுக் கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .