2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாணத்திற்கான முதலாவது பதக்கம்

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 19 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

பாடசாலைகளுக்கிடையிலான 2016ஆம் ஆண்டிற்கான தேசிய மட்ட காராட்டி சுற்றுப்போட்டியில், கிழக்கு மாகாணத்துக்கான முதலாவது பதக்கத்தை, திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட மாணவன் எஸ்.றிசோபன் பெற்றுக் கொடுத்தார்.

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலையில் கல்வி பயிலும்  மாணவனே, இவ்வாறு மாகாணத்துக்கான ஒரேயொரு பதக்கத்தை பெற்றுக் கொடுத்து பாடசாலைக்கும் வலயத்துக்கும் மாகாணத்துக்கும் பெருமை சேர்த்தார்.

கொழும்பு கிரிபத்கொட விகாரமகாதேவி பாடசாலையில் இடம்பெற்ற 17 வயதுக்குட்பட்ட காட்டா போட்டியில், மூன்றாம் இடத்தை பெற்றதன் மூலம் அவர் இச்சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

இவரது இச்சாதனை குறித்து கல்வி சமூகங்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், வலயக் கல்விப்பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், பிரதிக் கல்விப்பணிப்பாளர் வி.குணாளன், கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஆர்.இராசமாணிக்கம், பாடசாலை அதிபர் எம்.கிருபைராஜா உள்ளிட்டவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இது தவிர, இவருக்கான பயிற்சியினை வழங்கி வெற்றிக்காக உழைத்த ராம் கராட்டி சங்கத்தின் இலங்கைக்கான போதானசிரியர் சிகான் கே.கேந்திரமூர்த்தியையும் பாராட்டினர். 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X