2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

Bajaj Electricals Ltd தயாரிப்புகள் அறிமுகம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 21 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

Bajaj Electricals Ltd நிறுவனம் தனது தயாரிப்புகளை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. Bajaj கூரை மற்றும் வெப்ப வெளியேற்ற மின்விசிறிகளுக்கான விநியோத்தகராக Macksons Holdings நிறுவனங்களின் ஒரு துணை நிறுவனமான Mans Lanka (Pvt) Ltd நிறுவனத்தை Bajaj Electricals நியமித்துள்ளது.

மேலும் Bajaj வீட்டு உபயோக சாதனங்கள் மற்றும் மின்விளக்கு உற்பத்திகளின் விநியோகத்தராக Jinasena Pvt Ltd நிறுவனத்தை நியமித்துள்ளது.   

Bajaj Electricals நிறுவனம் தனது பரந்த தயாரிப்புகளின் மூலமாக இந்தியாவிலும், ஏனைய சர்வதேச சந்தைகளிலும் பல மில்லியன் கணக்கான இல்லங்களுக்கு சௌகரியத்தையும், மகிழ்ச்சியையும் வழங்கியுள்ளது.   

இந்த அறிமுக விழாவில் நேரடியாக கலந்து கொண்டு, தயாரிப்புகள் தொடர்பான அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் 300 வரையான முகவர்களை Bajaj Electricals வைபவத்திற்கு அழைத்திருந்தது.   

Bajaj Electricals நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதித்தலைமை அதிகாரியும், ஏற்றுமதிப் பிரிவின் தலைமை அதிகாரியுமான பிரதீப் பட்டீல் கருத்துத் தெரிவிக்கையில், ‘ஒரு உற்பத்திப் பிரிவு என்ற கோணத்தில் எடுத்து நோக்குகையில் நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்கள் தரமான உற்பத்திகள் மட்டுமல்லாது, பாவனையாளர்களின் ஒட்டுமொத்த அனுபவத்துடனும் தொடர்புபட்டது.   

ஆகவே வர்த்தகநாமம் ஒன்றின் மீது பாவனையாளர்கள் கட்டியெழுப்புகின்ற நம்பிக்கையானது மிகவும் முக்கியமானது. இலங்கையில் எமது பங்காளர்கள் மிக நீண்ட அனுபவத்தைக் கொண்டுள்ள நிலையில், நாம் இங்கே தொடர்ந்தும் எமது வலையமைப்பை விஸ்தரித்து, புதிய மற்றும் உலகத்தரம் வாய்ந்த உற்பத்திகளை அறிமுகம் செய்வோம்.

Electricals Ltd நிறுவனத்தின் துணையுடன் எமது பங்காளர்கள் மற்றும் முகவர்களின் எதிர்காலம் பிரகாசிக்கவேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், நாம் ஒன்றிணைந்து, தொடர்ந்தும் நம்பிக்கையை ஊக்குவிக்க முடியும் என உறுதியாக நம்புகின்றோம்’. என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .