2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உடன்படிக்கை கைச்சாத்திட்டது SLTC

Gavitha   / 2016 செப்டெம்பர் 21 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

Sri Lanka Technological Campus (SLTC) தனது அங்கிகாரங்கள் மற்றும் இணைப்புக்கள் பட்டியலில் சேர்ப்பித்து வருகின்ற பல்வேறு பங்காளர்களின் வரிசையில், உலகப்புகழ்பெற்ற Lancaster பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையானது, SLTC மாணவர்களுக்கு புத்தாக்கத்திற்கு வலுவூட்டி, உலகில் மிகவும் அங்கிகரிக்கப்படுகின்ற பட்டப்படிப்புக்களில் ஒன்றின் உதவியுடன் வரையறைகள் அனைத்தையும் விஞ்சுவதுக்கு வழிகோலவுள்ளது.   

Lancaste பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியத்தில் முதல் 10 ஸ்தானங்களுக்குள் நிரற்படுத்தப்பட்டுள்ளதுடன், சர்வதேசரீதியாக உச்சத்திலுள்ள 1% பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகவும் திகழ்ந்து வருகின்றது. மேலும், ‘இங்கிலாந்தில் பணத்துக்கான மிகச் சிறந்த பெறுமதியை வழங்கும் பல்கலைக்கழகம்’ என்ற தனித்துவமான சிறப்பையும் Lancaster சம்பாதித்துள்ளது. ஒட்டுமொத்தமான மாணவர்களின் திருப்தி மட்டத்தில் அது ஈட்டியுள்ள புள்ளிகள், முறையே கற்கை சார் பணியாளர்களின் அர்ப்பணிப்புடனான ஈடுபாடு மற்றும் பாடநெறி ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன.   

SLTC ஆனது 2+2 கற்கை நிகழ்ச்சிநிரலை வழங்குவதுடன், SLTC டிப்ளோமா கற்கைநெறியை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்கின்ற மாணவர்கள்,Lancaste பல்கலைக்கழத்துக்கான தகமை தேவைப்பாடுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தமது இளநிலைப் பட்டம் அல்லது ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பிற்காக கடைசி இரண்டு வருட பட்டப்படிப்பை Lancaster பல்கலைக்கழகத்தில் இணைந்து அங்கே முன்னெடுக்க முடியும்.   

இந்தப் பங்குடமை தொடர்பில் SLTC இன் பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. ஆர். ஜி. ரூபசிங்க அவர்கள் கூறுகையில், ‘இந்த உடன்படிக்கையானது SLTC மாணவர்கள் Lancaster பல்கலைக்கத்தில் தமது கல்வியைத் தொடர்வதற்கான மகத்தான ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதுடன், இது அவர்களின் எதிர்கால முயற்சிகளில் பாரிய வாய்ப்புக்களுக்கு வழிகோலும்.   

தமது கற்கைத்துறைகளில் திறமைகள், புத்திகூர்மை மற்றும் திரட்டிய அறிவு கொண்ட திறமைசாலிகளை எதிர்பார்க்கும் தொழில்தருநர்கள் விரும்புகின்ற மிகச் சிறந்த விண்ணப்பதாரிகளாக அவர்கள் மாறுவதுக்கு இந்த 2+2 கற்கைத்திட்டம் அவர்களைப் புடம்போடும்.’   

பௌதிக விஞ்ஞானத் துறையில் உள்நாட்டு/Edexcel அல்லது கேம்பிரிட்ஜ் உயர் தர பரீட்சையில் பௌதிகவியல், இரசாயனவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கு சாதாரண சித்திகளைப் பெற்றிருப்பதே இக்கற்கைநெறிக்குத் தேவையான குறைந்தபட்ச தகைமையாகும். உ/த பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிப்பதற்கு ஊக்குவிக்கப்படுவதுடன், அவர்கள் பெறுபேறுகள் கிடைத்தவுடன் இத்தகைமைகளைப் பூர்த்திசெய்தல் வேண்டும்.   
SLTC பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் அனைத்தும் வாஷிங்டன் உடன்படிக்கைக்கு அமைவாகவும் (பொறியியல் பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டங்களுக்கு சான்று அளிப்பதற்குப் பொறுப்பான உறுப்பு அமைப்புக்கள் மத்தியிலான ஒரு சர்வதேச உடன்படிக்கை), இலங்கை தகைமைகள் கட்டமைப்பு வழிகாட்டல்களுக்கு அமைவாகவும் விருத்தி செய்யப்பட்டுள்ளன. விரிவுரையாளர்கள் குழாம் ஆனது முறையே தத்தமது துறைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளதுடன், நீண்ட ஆண்டுகள் அனுபவத்தையும் கொண்டுள்ளனர்.   

ஸ்ரீலங்கா டெலிகொம் பீஎல்சி நிறுவனத்தின் முற்றுமுழுதான உரிமையாண்மையின் கீழான ஒரு துணை நிறுவனமான SLTC, இலத்திரனியல் மற்றும் மின்வலு முறைமைகள் பொறியியல், இலத்திரனியல் மற்றும் தொலைதொடர்பாடல் பொறியியல், இலத்திரனியல் பொறியியல் மற்றும் பொறியியல் முகாமைத்துவம் ஆகிய துறைகளில் நான்கு ஆண்டுகள் கொண்ட பொறியியல் பட்டப்படிப்புக்களை வழங்கிவருகின்றது. இந் நிகழ்ச்சித்திட்டங்கள் அனைத்தும், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படைகள் தொடர்பான உறுதியான கொள்கை, விளக்க மற்றும் பகுப்பாய்வு அறிவை வழங்கிவருகின்றன.   

இந்தப் பல்கலைக்கழகமானது கொழும்பிற்கு அருகாமையிலுள்ள பாதுக்க என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா ரெலிகொம் செய்மதி நிலையத்தில் அமைந்துள்ளது. 35 ஏக்கர் விசாலமான நிலப்பரப்பில் அமைந்துள்ள சௌகரியமான சூழலில் மாணவர்களுக்கு கற்கைநெறிகளை SLTC வழங்கிவருகின்றது. இப்பல்கலைக்கழகமானது, ஆய்வுகூடங்கள், வகுப்பறைகள், கேட்போர்கூடம் மற்றும் நூலகம் அடங்கலாக தேவையான வசதிகள் அனைத்தையும் கொண்டுள்ளது. நிர்வாக அலுவலகம் மற்றும் நகர பல்கலைக்கழகம் ஆகியன மருதானையில் உள்ள TRACE expert city உவைல இல் அமைந்துள்ளன.   

மேற்கூறிய பங்குடமையானது உயர் தரத்திலான பல்கலைக்கழக கற்கைநெறிகள் கிடைக்கப்பெறுவதற்கு அணுசரனையளிக்கும். செப்டெம்பர் 2016 தொகுதிக்கான உள்வாங்கல் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலதிக விபரங்களை 0711100500 என்ற அலைபேசி இலக்கத்துக்கு அழைப்பதன் மூலமாகவோ அல்லது www  .sltc.lk என்ற இணையத்தளத்தின் மூலமாகவோ அறிந்துகொள்ள முடியும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .