2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிகை அலங்கார ஊழியரைத் தாக்கிய பொலிஸ் பொறுப்பதிகாரியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ. ரமேஸ்,எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

ஹட்டன் நகரில் சிகை அலங்கார ஊழியர் ஒருவரை, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவர் தாக்கியதைக் கண்டித்து ஹட்டன் மற்றும் டிக்கோயா பிரதேச சிகை அலங்கார மற்றும் சிகை அலங்கார மருத்துவர் சங்கத்தினர் இணைந்து, ஹட்டன் பஸ்தரிப்பு நிலைய அரச மரத்துக்கு அருகில் எதிர்ப்பு ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,

ஹட்டன் நகரில் நீண்ட காலமாக இயங்கி வரும் சிகை அலங்கார நிலையம் ஒன்றில் ஊழியராகக் கடமையாற்றும் டிக்கோயாவைச் சேர்ந்த கதிரேசன் ரவிசங்கர் (வயது 28) என்பவரை ஹட்டன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவர், சிகை அலங்காரத்துக்கெனத் தனிப்பட்ட ரீதியில் தனது வாசஸ்தலத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை (23) மாலை அழைத்துள்ளார்.

எனினும், குறித்த நேரத்துக்குச் சமுகமளிக்காத ஊழியருக்கு இரண்டு முறை அழைப்பு விடுத்தும் செல்லத்தவறிய இவரை, பொலிஸ் வாகனத்தில் அழைத்துச்சென்று பொலிஸ் நிலையத்தில் அதிகாரியின் அறையில் வைத்துத் தாக்கப்பட்ட நிலையில் டிக்கோயர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகென அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

பொலிஸ் அதிகாரியின் இச்செயலைக் கண்டித்தே, இன்று சனிக்கிழமை (24) மாலை 2 மணி முதல், இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக சிகையலங்கார ஊழியர்கள் மற்றும் மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

மேலும், மலையக தமிழ் இளைஞர்களுக்கு எதிராக பொலிஸார்களால் அரங்கேற்றப்படும் அடிதடி அராஜகத்தை கண்டித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் இளைஞர்கள் வீதிக்கு வருவதற்கு அஞ்சப்படும் சூழ்நிலையை மீண்டும் இந்நாட்டில் அரங்கேற்ற இடம்கொடுக்க வேண்டாமென மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கணகராஜ் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .