2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பான் பசுபிக் தொடரில் சம்பியனானார் வொஸ்னியாக்கி

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 25 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனையான கரோலின் வொஸ்னியாக்கி, பான் பசுபிக் பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியன் பட்டம் வென்று, பெப்ரவரி 2015க்குப் பின்னர் அவரது முதலாவது தொடர் வெற்றியைப் பெற்றுள்ளார்.

டென்மார்க்கைச் சேர்ந்த 26 வயதான வொஸ்னியாக்கி, 2010,2011ஆம் ஆண்டுகளில் உலகத் தரப்படுத்தலில் முதலிடத்தில் காணப்பட்ட போதிலும், காயம் உட்படப் பல்வேறு காரணங்களால், பின்தங்கி வந்தார். தற்போது அவர், 28ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஜப்பானின் டோக்கியோ நகரில் இடம்பெற்றுவந்த பான் பசுபிக் பகிரங்கத் தொடரில், ஜப்பானின் நயோமி ஒசாகாவை எதிர்கொண்ட வொஸ்னியாக்கி, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் சம்பியன் பட்டம் வென்றார்.

முதலாவது செட்டில் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்த வொஸ்னியாக்கி, இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடி, வெற்றியைப் பெற்றுக் கொண்டார்.

வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்த வொஸ்னியாக்கி, "இந்தத் தொடரை வென்றமை குறித்து நான் பெருமையடைகிறேன். 2008ஆம் ஆண்டின் பின்னர் ஒவ்வோர் ஆண்டும், ஏதாவதொரு தொடரை நான் வென்றுள்ளதாக யாரோ இப்போது தெரிவித்தார். அது, சிறப்பான நிலைமை என்பதோடு, தொடர்ந்தும் முன்னகர்ந்து செல்ல விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .