2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன

Niroshini   / 2016 செப்டெம்பர் 25 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

செங்கலடி பல்நோக்கு கூட்டுறவுச்சங்க கோழித்தீன் தொழிற்சாலை பற்றிய விடயங்களை அறியாமல் சில அரசியல்வாதிகள் உண்மைக்குப்புறம்பான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர் என சங்கத்தின் தலைவர் க.சத்தியவரதன் தெரிவித்துள்ளார்.
 
குற்றம் காண்பதைத் தவிர்த்து சமூகநலன் கொண்ட அரசியல் பிரமுகர்கள் முன்வந்து எங்கள் செங்கலடி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் இன்னும் இயங்க முடியாமல் உள்ள தொழிற்சாலைகளை இயங்குவதற்கு நடவடிக்கையெடுத்தல் எங்கள் தமிழ் சமூகம் இன்னும் நன்மை பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
செங்கலடி பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் கீழுள்ள கோழித்தீன் தொழிற்சாலை தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் சங்கத்தின் தலைவர் க.சத்தியவரதன்  இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
அந்த அறிக்கiயில் மேலும் குறிப்பிடப்ட்டுள்ளதாவது,

அண்மையில் ஏறாவூர் வடக்கு, மேற்கு செங்கலடி பல்நோக்கு கூட்டுறவுச்சங்க கோழித்தீன் தொழிற்சாலை விடயமாக வெளிவந்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. சில அரசியல் பிரமுகர்கள் எங்கள் தொழிற்சாலை பற்றிய விடயங்களை அறியாமல் கூறியதை ஊடகவியலாளர்கள் தொழிற்சாலைக்குப் பொறுப்பான நிருவாகிகளிடம் விசாரித்து தலைப்பிடுவது நாகரீகமாக அமையும். தற்போது வளர்ந்துவரும் எமது சங்கத்தைப் பற்றி ஊடகங்கள் விமர்சிப்பது எங்களுக்கு பெரும் வேதனையைக் கொடுக்கிறது.
 
2010ஆம் ஆண்டு நெக்டெப் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட இத்தொழிற்சாலை முழுமைபெறாமல் இருந்ததுடன், எமது சங்கத்திடம் முறையாகக் கையளிக்கப்படவுமில்லை.
 
தற்போது கிழக்கு மாகாண விவசாய கூட்டுறவு அமைச்சர் கௌரவ துரைராஜசிங்கத்தின் அயராத முயற்சியினால் தொழிற்சாலையை இயங்கவைத்து குத்தகைக்குக் கொடுத்தபின் ஏன் இப்படி ஒரு செய்தி வெளியிட வேண்டும்.
 
இவற்றை வெளியிடும் அரசியல் பிரதிநிதிகளிடம் எத்தனையோ அபிவிருத்திக் குழுக்கூட்டங்களில் இவ்விடயம் தொடர்பாக சங்கத்தின் நிருவாகம் கூறியும் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்துவிட்டு ஏன் இப்போது குற்றம் கூறுகின்றார்கள்.
 
எங்கள் பிரதேசத்தின் அமைச்சரின் ஒத்துழைப்புடன் எங்கள் சங்கம் வளர்ந்து வரும்வேளை இந்த வளர்ச்சியைத் தடுக்கம் வண்ணம் பணிப்பாளர் சபையையும் முகாமைத்துவத்தையும் பாதிக்கும் வண்ணம் ஊடகங்களில் தவறான செய்தி வெளியிடவேண்டாம்.
 
குற்றம் காண்பதைத் தவிர்த்து சமூகநலன் கொண்ட அரசியல் பிரமுகர்கள் முன்வந்து எங்கள் செங்கலடி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் இன்னும் இயங்க முடியாமல் உள்ள தொழிற்சாலைகளை இயங்குவதற்கு நடவடிக்கையெடுத்தல் எங்கள் தமிழ் சமூகம் இன்னும் நன்மை பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .