2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 26 , பி.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைக்கல்வியைப் பூர்த்தி செய்த பின்னர், தொழில் வழிகாட்டலை ஏற்படுத்துக்கு ஃபஷன் பக், காலி தொழிற்பயிற்சி நிலையத்துடன் இணைந்து தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது. காலியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், அண்மையில் நடைபெற்ற க.பொ.த உயர்தரப்பரீட்சையில் தோற்றிய 4000க்கும் அதிகமான மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.   

இந்த நிகழ்ச்சியின் வளவாளராக கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் மற்றும் விருத்தி பணிப்பாளர் அஜித் குணவர்தன பங்கேற்றிருந்தார். மாகாண கல்வி அமைச்சர் (தென் மாகாணம்) சந்திம ராசபுத்ர விசேட விரிவுரையை வழங்கியிருந்ததுடன், காலி தொழிற்பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் பிரபாத் பாலசூரிய மற்றும் மேலதிக மாவட்ட செயலாளரான மாலனி லொகுபொதகம ஆகியோர் இந்நிகழ்வில் உரையாற்றியிருந்தனர்.   

பஷன் பக் பணிப்பாளரும் மற்றும் சிசு திரிமக மையத்தின் ஸ்தாபகருமான சபீர் சுபியன் கருத்து தெரிவிக்கையில், “காலியில் எமது தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சியை முன்னெடுத்திருந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். இதில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவான மாணவர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் பங்குபற்றிய மாணவர்கள் மத்தியில் காணப்பட்ட ஆர்வத்தைக் காணும் போது பெருமளவு ஊக்கமளிப்பதாக அமைந்திருந்தது. மேலும் ஒவ்வொரு சமூகத்திலும் இதுபோன்ற நிகழ்வை முன்னெடுப்பதற்கு எமக்கு பொறுப்பு சேர்க்கப்பட்டிருந்தது. இது போன்ற நிகழ்வுகளை நாம் நாடு

முழுவதிலும் முன்னெடுப்பதுக்கு திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.   
கலாநிதி. எஸ்.எச்.எம். ஃபராஸ் - பதில் பொது முகாமையாளர், நாமல் ஏக்கநாயக்க, மனித வளங்கள் மற்றும் அபிவிருத்தி முகாமையாளர், சிரேஷ்ட சந்தைப்படுத்தல் பணிப்பாளர் இஷான் கொடமான்ன மற்றும் பிராந்திய முகாமையாளர் - மொஹமட் ரஷீட் ஆகியோரும் ஃபஷன் பக் சார்பில் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.   

“சிசு திரிமக மையம் எனும் நிறுவனத்தின் பிரதான சமூக பொறுப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு அங்கமாக நிறுவனம் அண்மையில் அதன் சொந்த புலமைப்பரிசில் நடவடிக்கைகளை அறிமுகம் செய்திருந்தது. மேலும், பாடசாலை மாணவர்களுக்கான நேருக்கு நேர் ஆலோசனைகளை வழங்கும் திட்டத்தையும் அறிமுகம் செய்திருந்தது. இது நாட்டின் சகல மாவட்டங்களிலும் கல்வி அமைச்சுடன் இணைந்து 2016 ஆம் ஆண்டு முழுவதும் முன்னெடுக்கப்படும்’ என கலாநிதி. எஸ்.எச்.எம். ஃபராஸ் - பதில் பொது முகாமையாளர் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .