2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

புதிய அச்சு இயந்திரங்களை அறிமுகம் செய்யும் JKOA

Gavitha   / 2016 செப்டெம்பர் 26 , பி.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

TOSHIBA TEC உடன் இணைந்து ஐந்து புதிய பல் செயற்றிறன் கொண்ட அச்சியந்திரங்களை JKOA அறிமுகம் செய்துள்ளது. இந்த பல்செயற்திறன் கொண்ட தெரிவுகளில் மூன்று வர்ண தொடர்கள் (13 மாதிரிகள்) மற்றும் இரு மொனோக்ரோம் தொடர்கள் (10 மாதிரிகள்) அடங்கியுள்ளன. இவை அனைத்தும் புதிய கட்டமைப்பு அலங்காரத்தைக் கொண்டுள்ளதுடன், அடிப்படை கறுப்பு நிற வெளிப்புற வர்ணத்தையும் கொண்டுள்ளன.   
இந்தப் பல்செயற்றிறன் கொண்ட அச்சியந்திரங்கள், புதிய பொறிமுறைநுட்பத்திலமைந்த மென்பொருள் கட்டமைப்பையும், மேம்படுத்தப்பட்ட வன்பொருள் கட்டமைப்பையும் கொண்டுள்ளன. இதன் மூலம் எந்தவொரு வியாபாரத்தினதும் அச்சிடல், காகிதாதிகள் நிர்வகிப்பு மற்றும் பணிப்போக்கு தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.   
புதிய மென்பொருள் மற்றும் வன்பொருள் கட்டமைப்புகளில், Intel’இன் புதிய புரொசெசர் அடங்கியுள்ளதுடன், மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய tablet-style user interface (UI), Embedded Application Platform மற்றும் Dual-Scan Document Feeder (DSDF) போன்றன காணப்படுகின்றன. இவை Toshiba புத்தாக்கமான பொருட்கள் தெரிவுகளைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. சகல உள்ளம்சங்களும் நிறுவனங்களை வினைத்திறன் வாய்ந்த வகையில் இயங்க உதவுவதுடன், செலவீனம் குறைந்த வகையிலும், தமது பணிப்போக்கை மேம்படுத்திக்கொள்ளவும் உதவியாக அமைந்துள்ளது.   
பல்பணிகச் செய்பணி மற்றும் embedded optical character recognition (OCR) போன்ற சிக்கல் நிறைந்த செயற்பாடுகளை முன்னெடுத்தல் போன்றன சக்தி வாய்ந்த multi-core Intel Atom TM processor  உள்ளடக்கத்தின் மூலம் இலகுபடுத்தப்பட்டுள்ளன. The Embedded Application Platform n என்பது MFPகளுக்கு இலகுவாக பதிக்கப்பட்ட அல்லது மூன்றாம் நபர் அப்ளிகேஷன்களை பயன்படுத்தவும், cloud இல் இலகுவாக இணைந்து, பாவனையாளர்களை எங்கிருந்தவாறும் பணியாற்றுவதுக்குஉதவியாக அமைந்துள்ளது.   
Toshiba இன் 9-inch tablet-style UIஇல் உள்தூண்டுதலுடனான பாவiனாயர் அனுபவம் சேர்க்கப்படுகிறது. புதிய e-BRIDGE Tm Next controller, UI இணைந்த செயற்பாட்டின் மூலமாக, எந்தவொரு பாவனையாளரின் பிரத்தியேகமான பணிப்போக்கு தேவைகளை உள்வாங்கிக் கொள்ள உதவியாக அமைந்துள்ளது.   
Toshiba இன் இலங்கைக்காக முகாமையாளர் பிலிப்வு கருத்துத்தெரிவிக்கையில், ‘எமது பிந்திய Toshiba தெரிவுகள் மூலமாக எமது புத்தாக்கமான பல்செயற்திறன் வாய்ந்த அச்சியந்திரங்கள் பிரதிபலிக்கப்படுகின்றன. வௌ;வேறு துறைகள் பிரத்தியேகமான தேவைகளைக் கொண்டிருப்பதை அறிந்து, நவீன உள்ளம்சங்கள் படைத்த, புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எமது புதிய பல்செயற்றிறன் வாய்ந்த அச்சியந்திரங்களைத் தயாரித்து, இன்றைய சிக்கல் நிறைந்த பாவனையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்து வருகிறோம்’ என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X