2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கிறெய்க் வெளியே; பட்டேல் உள்ளே

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 26 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று நிறைவடைந்த நிலையில், எஞ்சிய போட்டிகள் இரண்டிலும், அவ்வணியின் சுழற்பந்து வீச்சாளர் மார்க் கிறெய்க் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது போட்டியில், அவரது வயிற்றுப் பகுதிக்கு அண்மையில் ஏற்பட்ட உபாதையைத் தொடர்ந்தே, இத்தொடரிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

அண்மைக்காலத்தில் நியூசிலாந்தின் முக்கியமான சுழற்பந்து வீச்சாளராக மாறியிருந்த அவர், கான்பூர் போட்டியில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் கைப்பற்றிய போதிலும், சிறப்பாகப் பந்து வீசியிருந்தார்.

இந்நிலையில், வௌியேற்றப்பட்டுள்ள கிறெய்க்குக்குப் பதிலாக, அனுபவமிக்க வீரரான ஜீதன் பட்டேல், நியூசிலாந்துக் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 48.46 என்ற சராசரியில் 52 விக்கெட்டுகளையே கைப்பற்றியுள்ளார். அத்தோடு, 2013ஆம் ஆண்டே, இறுதியாக டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடியிருந்தார்.

எனினும், இங்கிலாந்துப் பிராந்தியப் போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசிய அவர், இம்முறை நிறைவடைந்துள்ள போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்ற வொர்விக்‌ஷையர் அணிக்காக 69 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, இத்தொடரில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியோரின் பட்டியலில் முதலிடத்தைப் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .