2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உதயங்க வீரதுங்கவுக்கு சிவப்பு நோட்டீஸ் 30ஆம் திகதி தீர்ப்பு

Gavitha   / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவைக் கைதுசெய்வதற்காக, சர்வதேச பிடிவிறாந்து (ரெட் நோட்டீஸ்) பிறப்பிப்பது தொடர்பில், எதிர்வரும் 30ஆம் திகதியன்று தீர்ப்பளிக்கப்படும் என்று, கொழும்பு நீதவான் நீதிமன்றம், நேற்றுத் திங்கட்கிழமை அறிவித்தது.

இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்வதில் இலங்கைக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு நேரடித் தொடர்புள்ளது என்று, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு தாக்கல் செய்திருந்த வழக்கே, நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  

உதயங்க வீரதுங்க உக்ரேனில் வசித்த வீட்டுக்கு, வெளிவிவகார அமைச்சரின் ஊடாக, நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எனினும், அவர் அந்த வீட்டில் இல்லை என்று, உக்ரேன் அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.  

சர்வதேச பொலிஸாரின் மூலமாக அவரை கைதுசெய்வதற்கு திறந்த பிடிவிறாந்தை (ரெட் நோட்டீஸ்) பிறப்பிக்குமாறு, நிதிக்குற்ற விசாரணைப்பிரிவு, நீதிமன்றத்தில் கோரிநின்றது.  

நிதிக்குற்ற விசாரணைப்பிரிவின் கோரிக்கையைச் செவிமடுத்த கோட்டை நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன, அவருக்கு எதிராக சிவப்பு நோட்டீஸ் விடுவதா, இல்லையா என்பது தொடர்பில், எதிர்வரும் 30ஆம் திகதியன்று தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவித்தார்.  

ரஷ்யாவின் இலங்கைக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைதுசெய்வதற்காக, சிவப்பு நோட்டீஸ் விநியோகிக்குமாறு பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் விடுத்திருந்த கோரிக்கையை அந்த நீதிமன்றம், ஓகஸ்ட் 15ஆம் திகதி திங்கட்கிழமை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களைக் கொள்வனவு செய்யும்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமையை அடுத்தே, நிதி மோசடி விசாரணைப்பிரிவு மேற்கண்டவாறு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .