2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சம்பியனானது அக்கரைப்பற்று றஹீமியா வி.க

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகத்தின் 32ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நடத்தப்பட்ட மர்ஹூம் மசூர் சின்னலெப்பை ஞாபகார்த்த மெகா நைட் மின்னொளி மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், அக்கரைப்பற்று றஹீமியா விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

அம்பாறை மாவட்டத்தின் 18 முன்னணிக் கழகங்கள் பங்குபற்றிய இச்சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி, அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில், கடந்த வாரயிறுதியில் நடைபெற்றது.

இத்தொடரின், அரையிறுதிப் போட்டியொன்றில், சோபர் விளையாட்டுக் கழகமும், பி.பி.பி. அணியும் மோதியதுடன், அதில், சோபர் அணி 22 ஓட்டங்களால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

மற்றைய அரையிறுதி ஆட்டத்தில், திருக்கோவில் உதயசூரியன் அணியும், அக்கரைப்பற்று றஹீமியா அணியும் மோதியதில், றஹீமியா அணி மூன்று விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றது.

இறுதிப் போட்டிக்கு, றஹீமியா அணியும், சோபர் அணியும் தெரிவான நிலையில், இடம்பெற்ற இறுதிப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய அட்டாளைச்சேனை சோபர் அணியினர், நிர்ணகிக்கப்பட்ட ஐந்து ஓவர்களில் 45 ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய, அக்கரைப்பற்று றஹீமியா அணியினர் மிகவும் சிறப்பாக விளையாடி 4.1 ஓவர்களில் 47 ஓட்டங்களை மிக இலகுவாகப் பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டனர்.

சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.எல்.ஏ.பத்தாஹ் தலைமையில் நடைபெற்ற இறுதிநாள் நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், திருகோணமலை நீதவான் நீதிமன்றி நீதிபதி என்.எம்.அப்துல்லா உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .