2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் முதலிடம்

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 27 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

சென்ரல் விளையாட்டுக்கழகம், ஜோர்ஜ் வெப்ஸ்ரர் வெற்றிக்கிண்ணத்துக்காக யாழ்.மாவட்ட கிரிக்கெட் அணிகளில் சிறந்த அணியை தெரிவு செய்யும் தரப்படுத்தலில் இந்த வருடம் கடந்த ஜூலை மாதம் வரையில் நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில், 107.23 புள்ளிகளைப் பெற்ற கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி (கே.சி.சி.சி) முதலிடத்தில் உள்ளது.

2010 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த தரப்படுத்தலில், 50, 40, 30 ஓவர்கள் மற்றும் இருபது – 20 ஆகிய போட்டிகளுக்கு தனித்தனியாக புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இதனடிப்படையில் இவ்வருடம் ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 31 ஆம் திகதி வரையில் நடைபெற்ற 140 போட்டிகளின் தரவரிசை வெளியாகியுள்ளது.

கே.சி.சி.சி அணி இந்தக் காலப்பகுதியில் 19 போட்டிகளில் பங்குபற்றி அதில் 14 போட்டிகளில் வெற்றிபெற்று, 107.23 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

சென்றலைட்ஸ் அணி 17 போட்டிகளில் பங்குபற்றி 14 போட்டிகளில் வெற்றிபெற்று 103.25 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்திலும், திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் 21 போட்டிகளில் பங்குபற்றி அதில் 15 போட்டிகளில் வெற்றிபெற்று 103.09 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

தொடர்ந்து, பத்து இடங்களையும் முறையே மானிப்பாய் பரிஸ் (94.20), ஜொலிஸ்ரார்ஸ் (90.96), ஜொனியன்ஸ் (81.42), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (78.89), ஓல்கோல்ட்ஸ் (57.68), கிறாஸ்கோப்பர்ஸ் (56.62), சென்ரல் (50.87) பெற்றுக்கொண்டன.
இந்தத் தரப்படுத்தலில் யாழ்.மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடும் 24 அணிகள் உள்வாங்கப்பட்டன.

இந்தத் தரப்படுத்தல் 2010 ஆரம்பிக்கப்பட்டது முதல் முறையே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (2010), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (2011), கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் (2012), ஜொனியன்ஸ் (2013), சென்ரல் (2014), சென்றலைட்ஸ் (2015) ஆகிய அணி முன்னிலை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .