2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பாகிஸ்தான் பிரதமருக்கு ஐ.நாவில் சுஷ்மா பதிலடி

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 27 , பி.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தானுக்கும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபுக்கும் பதிலடியை வழங்கினார்.

கடந்த 21ஆம் திகதி, பொதுச் சபையில் உரையாற்றியிருந்த பிரதமர் ஷரீப், இந்தியா மீது அதிகமான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக. தனது உரையில் ஒரு பகுதியை ஒதுக்கிய சுஷ்மா, "பாகிஸ்தானின் பிரதமர், இதே அரங்கைப் பயன்படுத்தி, எனது நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக ஆதாரமற்றுக் குற்றஞ்சாட்டியிருந்தார். ஏனையோர் மீது மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை முன்வைப்பேர், தங்களைத் தாங்களே பரீட்சித்துப் பார்த்துக் கொண்டு, தங்களது நாட்டில் எவ்வாறான மோசமான துஷ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றன என்பதைப் பார்க்க முடியும்" என்றார்.

இரு நாடுகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளுக்காக, முன் நிபந்தனைகளை இந்தியா முன்வைப்பதாகவும், பிரதமர் ஷரீப் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதற்கும் பதிலளித்த சுஷ்மா, "என்ன முன் நிபந்தனைகள்? எங்களது அரசாங்கம் பதவியேற்கும் நிகழ்வுக்கு (பாகிஸ்தான் பிரதமரை) அழைப்பதற்கு முன்னர் நிபந்தனைகளை முன்வைத்தோமா? ஆசியாவின் இதயம் மாநாட்டுக்காக இஸ்லாமாபாத்துக்கு நான் சென்று, முழுமையான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளுக்குச் சம்மதிக்கும் போது முன் நிபந்தனைகளை நாம் முன்வைத்தோமா? காபூலிலிருந்து லாகூர் வரை பிரதமர் மோடி சென்ற போது, முன் நிபந்தனை எதையும் முன்வைத்தோமா? என்ன முன் நிபந்தனைகள்?" என்று கேள்வியெழுப்பினார்.

பாகிஸ்தான் மீது மிதமான கொள்கையைப் பின்பற்றியிருந்த போதிலும் கூட, பதன்கோட் [தாக்குதல்], பஹாடுர் அலி, உறி [தாக்குதல்]போன்றவையே தங்களுக்கான பதிலாகக் கிடைப்பதாகத் தெரிவித்தார். என்னவிதமான தாக்குதல்கள் கிடைத்தாலும், காஷ்மிர் என்ற அவர்களது கனவு, நனவாகாது எனவும் அவர் எச்சரித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X