2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாடசாலைக்குப் பூட்டு

Niroshini   / 2016 செப்டெம்பர் 27 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட புனித கெப்ரியல் மகளிர் வித்தியாலயத்தில் தெள்ளு பூச்சி கடியால் 260 மாணவிகளில் சில மாணவிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் வலய கல்வி பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

குறித்த மகளிர் வித்தியாலயத்தில் தரம் 1 ஏ.பீ, தரம் 2 ஏ.பீ மற்றும் தரம் 5 ஏ.பீ ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவிகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இவ்வித்தியாலயத்தில் கல்வி பயிலும் க.பொ.த உயர் தர கலை பிரிவு மாணவிகள் கற்கும் வகுப்பிலும் தெள்ளு பூச்சிகள் பரவியதாக தெரிவிக்கப்பட்ட அதேவேளை, அம்மாணவிகளின் வகுப்புறைகள் மாற்றம் செய்யப்பட்டு கல்வி நடவடிக்கைகள் முன்னெடுப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, இதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாக இன்று முதல் இரண்டு தினங்களுக்கு குறித்த வகுப்புகளின் கல்வி நடவடிக்கையை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை புதன்கிழமை காலை பொது சுகாதார பரிசோதகர் ஊடாக தெள்ளு பூச்சிகள் அழிக்கும் பணிகளிலும் ஈடுப்படபோவதாகவும் பூரண சுகாதார பரிசோதனையின் பின் மீண்டும் குறித்த வகுப்பறைகள் இயங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .