2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மூன்றாம் தரப்பு உரிமைப்படுத்தல்...

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 27 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்றாம் தரப்பு உரிமைப்படுத்தல் என்பது, நிறுவனமோ, நிதியமோ, முகவரோ அல்லது தனிநபரோ என மூன்றாம் தரப்பொன்று, வீரரொருவரின் நிதி சம்பந்தமான அனைத்து உரிமைகளையும் தம்வசப்படுத்துதல் ஆகும்.

இவ்வாறான மூன்றாம் தரப்பு உரிமைப்படுத்தல் காணப்படும் போது, வீரரொருவர் மற்றொரு கழகத்துக்கு விற்கப்படும் போது கிடைக்கும் சலுகைகள், விற்கும் கழகத்துக்கு அல்லாமல், குறித்த மூன்றாம் தரப்புக்கே கிடைக்கும் என்பதோடு, ஒப்பந்தங்கள் தொடர்பிலும் ஒரு குறிப்பிட்ட அளவை, குறித்த தரப்புப் பெற்றுக் கொள்ளும். அத்தோடு, வீரர்களைக் கட்டுப்படுத்தும் ஒன்றாகவும் இது மாறும்.

நவீனகால அடிமைத்துவம் என அழைக்கப்பட்ட இந்த உரிமைப்படுத்தல், 2008-09 பருவகாலத்தில், இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்கத்தால் தடை செய்யப்பட்டது. பின்னர், 2014ஆம் ஆண்டில் வெளியான சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன அறிக்கையொன்று, இந்த நடைமுறையானது கழகங்களைக் கடன் வட்டத்துக்குள் தள்ளுவதாகவும் அவைகளைத் தங்கியிருக்கும் ஒன்றாக மாற்றுவதாகவும் வீரர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதோடு விளையாட்டின் நற்பெயருக்கும் கேடு விளைவிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டில், சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தால், இது தடை செய்யப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .