2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இருவருக்கு சரீரப்பிணை

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் மற்றும் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சேகு அலி ஆகியோரை நேற்றுச் செவ்வாய்க்கிழமை மாலை தலா 50 ஆயிரம்; ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில்; ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி, நேற்றுச் செவ்வாய்க்கிழமை விடுவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளரை அச்சுறுத்தினார் என மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை (26) முறைப்பாடு செய்திருந்தார்.

அதேபோன்று, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் தனக்கு ஏசினார் என ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (27) காலை முறைப்பாடு செய்திருந்தார்.
இதையடுத்து இவ்விருவரையும் ஏறாவூர் பொலிஸார்  ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை மாலை ஆஜர்படுத்தினர். இதன்போது மேற்படி இருவரையும் தலா ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் விடுதலை செய்த நீதவான்,  இவ்விருவருக்குமிடையிலான இந்த பிணக்கு தொடர்பான வழக்கை ஏறாவூர் மத்தியஸ்த சபைக்கு ஒப்படைத்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .