2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சுற்றுலா நகரங்களில் கொழும்புக்கு நான்காவது இடம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 28 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா நகரங்களில் நான்காவது இடத்தில் கொழும்பு தரப்படுத்தப்பட்டுள்ளது. Mastercard இனால் வருடாந்தம் வெளியிடப்படும் Global Destinations Cities சுட்டெண் தரப்படுத்தலில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.   

இந்தச் சுட்டெண்ணின் பிரகாரம் இலங்கையின் வர்த்தக தலைநகராகத்திகழும் கொழும்பு 19.57 சதவீத வளர்ச்சியைக் கடந்த ஏழு ஆண்டுகளில் பதிவு செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.   
சர்வதேச சுற்றுலாப்பயணிகள் பெருமளவு வருகை தந்த நாடுகள் வரிசையில் ஜப்பானின் ஒஸாகா முதல் இடத்திலும், சீனாவின் செங்டு மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அபு தாபி முறையே இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை பெற்றுள்ளன.   

இலங்கையின் கொழும்பைத் தொடர்ந்து, ஜப்பானின் டோக்கியோ ஐந்தாமிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.   
இதேவேளை, தாய்லாந்தின் பாங்கொக் நகரம் சுற்றுலாப்பயணிகள் அதிகளவு செலவு செய்யும் நகரங்களில் முதல் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களில் லன்டன் மற்றும் பரிஸ் ஆகியன தரப்படுத்தப்பட்டுள்ளன.   

2009 - 2016 காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு பதிவாகியிருந்தது. நாட்டில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது என Mastercard இனால் வருடாந்தம் வெளியிடப்படும் Global Destinations Cities சுட்டெண்ணில் குறிப்பிடப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .