2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நுகேகொடயில் ஒரியன்ட் ரெசிடென்சிஸ்

Gavitha   / 2016 செப்டெம்பர் 28 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய சொகுசு தொடர்மனைத்தொகுதியாக ஒரியன்ட் ரெசிடென்சிஸ் தற்போது நிர்மாணிக்கப்பட்ட வண்ணமுள்ளது. ஒரியன்ட் கொன்ஸ்ட்ரக்ஷனின் உயர் தர நிர்மாண செயற்பாடுகள் மற்றும் அலங்கார வடிவமைப்பு ஆகியவற்றின் மூலமாக இலங்கையின் தொடர்மனை செயற்றிட்டங்கள் நிர்மாணத்தில் உத்தரவாதம் சேர்க்கப்பட்டுள்ளது.  

ஒரியன்ட் ரெசிடென்சிஸ் நிர்மாணப் பணிகளை ஒரியன்ட் கொன்ஸ்ட்ரக்ஷன் கம்பனி பிரைவெட் லிமிட்டெட் நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்ட வண்ணமுள்ளது. 1998 இல் ஸ்தாபிக்கப்பட்டது முதல், வைத்தியசாலைகள், பாடசாலைகள், ஹொட்டல்கள் மற்றும் வீடமைப்புத்திட்டங்களை முன்னெடுத்த வண்ணமுள்ளது. உயர் தரங்கள் மற்றும் தர மதிப்பீடுகளில் உயர் கவனம் செலுத்துகைகள் காரணமாக, ஒரியன்ட்ஸ் கொன்ஸ்ட்ரக்ஷன் ISO தரச்சான்றையும் பெற்றுள்ளது. கூட்டாண்மை நிறுவனம் எனும் வகையில், செயற்றிறன், வினைத்திறன் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றைக் கொண்டுள்ள ஒரியன்ட் கொன்ஸ்ட்ரக்ஷன், உயர் தரப்படுத்தலை (C1) நிர்மாண பயிற்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்திடமிருந்து (ICTAD) பெற்றுள்ளது. தமது பிரிவில் கொண்டுள்ள வினைத்திறன் காரணமாக, இலங்கையின் சிறந்த ஒப்பந்தக்காரர்கள் வரிசையில் உயர்ந்த ஸ்தானத்தில் காணப்படுகிறது. நிறுவனத்தின் வலிமை மற்றும் திறன் ஆகியவற்றை மேலும் உறுதி செய்து, ஒரியன்ட் கொன்ஸ்ட்ரக்ஷன், நிர்மாண தொழிற்துறை அபிவிருத்தி அதிகாரசபையினால் (CIDA) ஏற்பாடு செய்யப்படும் வருடாந்த தேசிய நிர்மாணச் சிறப்புகள் விருதை பெற்றுக்கொண்டது.   

பெருமளவான அறிவு மற்றும் அனுபவத்தைக் கொண்டுள்ள, ஒரியன்ட் கொன்ஸ்ட்ரக்ஷன், ரியல் எஸ்டேட் துறையில் பிரவேசித்துள்ளதுடன், நிறுவனத்தின் உரிமையாண்மையை கொண்ட அபிவிருத்தி திட்டமாக நுகேகொட ஒரியன்ட் ரெசிடென்சிஸ் அமைந்துள்ளது. இந்த புதிய செயற்றிட்டம் 2018 இல் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 105 பேர்ச் காணியில் ஜம்புகஸ்முல்ல வீதி, நுகேகொடயில் இந்தத் திட்டம் நிர்மாணிக்கப்படவுள்ளது. நுகேகொட சந்தைக்கும், சுப்பர் மார்க்கெட், முன்னணி பாடசாலைகள் மற்றும் மருத்துவ வசதிகள் ஆகியவற்றுக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்படும் இந்தத் தொடர்மனை பசுமையான காற்று உட்புகக்கூடியவகையில் அமையவுள்ளது. பசுமையான பச்சைநிற சூழலில் அமையவுள்ளதுடன், நாவல ஈரநிலம் மற்றும் பொழுதுபோக்கு (Wetland park) பகுதி ஆகியவற்றை அண்மித்தும் அமையவுள்ளது.  

ஓரியன்ட் ரெசிடென்சிஸ் 6 மாடிகளைக் கொண்டிருக்கும் என்பதுடன், பெருமளவு வாகன தரிப்பிட வசதிகள் மற்றும் 60 அலகுகளில் 2 மற்றும் 3 படுக்கையறைகளை கொண்டிருக்கும். ஒவ்வொரு தொடர்மனையும் 1,400-1,700 சதுர அடிகளில் அமையவுள்ளன. இவை தற்போது நிர்மாணிக்கப்படும் ஏனைய தொடர்மனை செயற்றிட்டங்களுடன் ஒப்பிடுகையில் இவை பெரியளவில் அமைந்துள்ளன. 2 மற்றும் 3 படுக்கையறைகளைக் கொண்ட தொடர்மனைகளுக்கு மேலதிகமாக, 1900 சதுர அடிகளைக் கொண்ட பென்த்ஹவுஸ்களையும் கொண்டிருக்கும்.  

இந்தத் தொடர்மனைத்தொகுதி ஆர்கேடியமினால் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பொருட்களின் பெறுமதி, சௌகர்ய மட்டங்கள் அல்லது தொடர்மனைகளுக்கு அழகியல் கோட்பாடுகள் போன்றன எவ்வகையிலும் இணக்கத்தீர்வுகள் எய்தப்படமாட்டாது. இந்த சொத்தின் அலங்காரத்தில் பெரிய இடவசதிகளைக் கொண்ட தொடர்மனைகள், சௌகரியமான நாளாந்த செயற்பாடுகளுக்கான அலங்காரம் போன்றன அடங்கியுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .