2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘உண்மை எது? மக்களே தீர்மானிக்கட்டும்’

Gavitha   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆன்மீக அபிவிருத்தியூடாக, சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக தான் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்துவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஊடகங்களில் நாம் காண்பது தொடர்பில், மக்களே முடிவெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.  

தகவலறியும் சட்டமூலம் தொடர்பிலான சர்வதேச மாநாடு, கொழும்பில் நேற்றுப் புதன்கிழமை (28) ஆரம்பிக்கப்பட்டது. இதனை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.  

“ஊடகங்களில் நாம் காண்பது தொடர்பில் மக்களே முடிவெடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அங்கு தொடர்ந்து உரையாற்றியதாவது,  

“ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் போஷித்து பாதுகாக்கும் நாடென்ற வகையில், தகவல் அறியும் உரிமையானது நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் திறந்துவிடப்பட வேண்டும்.  

தகவல் அறிந்துகொள்ளும் உரிமையை சமூகத்தின் அடிப்படை உரிமை உறுதிப்படுத்துதல் தொடர்பாக நீண்ட காலமாக அரசியல் மேடைகளிலும் சிவில் அமைப்புக்களாலும், பொதுமக்களிடையேயும் விவாதிக்கப்பட்டிருந்த போதிலும், கடந்தகால அரசுகள் நிறைவேற்றத் தவறிய அச்செயற்பாட்டை, தற்போதய அரசினால் நிறைவேற்ற முடிந்திருக்கின்றது.  

அரச செலவினங்களுக்காக பொதுமக்களின் நிதியைப் பயன்படுத்தும்போதும் அதனை முகாமைத்துவம் செய்யும்போதும் ஏற்படும் முறைகேடான பயன்பாடுகள் மற்றும் தவறான நிதி முகாமைத்துவம் காரணமாக, நாட்டு மக்களுக்கு ஏற்படும் அநீதி மற்றும் நாட்டின் முன்நோக்கிய பயணத்துக்கு ஏற்படும் தடைகளும், தகவல் அறிந்துகொள்ளும் உரிமையை சமூகத்தின் அடிப்படை உரிமையாக உறுதிப்படுத்தப்படுத்துவதால் நீங்கிவிடும். 

ஊடக சுதந்திர சட்டம், அரசியலமைப்பு, உரிமைகள் ஆகியன எவ்வளவுதான் உறுதிப்படுத்தப்பட்டிருந்த போதிலும் இன்று பெரும்பாலான ஊடகங்கள் அவற்றின் உரிமையாளர்களினதும் முகாமைத்துவத்தினதும் விருப்பு, வெறுப்புகளுக்கமையவே செயற்படுகின்றன. ஊடக சுதந்திர உரிமைகளுக்கான வாய்ப்புகளை வழங்குவது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும்” என அவர் மேலும் கூறினார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .