2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘புதிய அரசியலமைப்புக்கான தேவை தற்போதில்லை’

Gavitha   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

“புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதென்பது, இந்த நல்லாட்சி அரசாங்கம் செய்யும் மோசடி நடவடிக்கையாகும்” என, முன்னாள் அமைச்சரும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.  

ஒன்றிணைந்த எதிரணியினால் கொழும்பில் நேற்றுப் புதன்கிழமை (28) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.    அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “தற்போதுள்ள அரசியலமைப்பைத் திருத்தியமைக்கக்கூடிய நிலைமை இருப்பினும், புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கவேண்டிய அவசியம் இல்லை. புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் தோரணையில், இனவாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவே, இந்த நல்லாட்சி அரசாங்கம் முயற்சிக்கின்றது” என்றார்.  

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் வெளியிடப்பட்ட கருத்தை, வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறினார்.    “அத்துடன், இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென, விக்னேஸ்வரன் உள்ளிட்டோருக்கு கடுமையாக அறிவிக்கவேண்டிய கடப்பாட்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளார்” என்றும் திஸ்ஸ விதாரண சுட்டிக்காட்டினார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .