2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மலையகத்தில்85% ஆண்கள் மதுவுக்கு அடிமை

Gavitha   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் ஆண்களில் 85 சதவீதமானோர், மதுபாவனைக்கு அடிமையாகியுள்ளனர் என்றும் இதனால், அவர்களது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும், ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.  

2016ஆம் ஆண்டு சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, ‘மதுபானம், போதைபொருள் தகவல் நிலையம்’ மற்றும் ‘பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம்’ என்பன இணைந்து, பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள சிறுவர்களின் பெற்றோர் மதுபானம் அருந்துவதால், அச்சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளன. இந்த ஆய்விலே மேற்படி விடயம் கண்டறியப்பட்டுள்ளது. 

‘சிறுவர்களின் வளர்ச்சிக்கு மது பாவனை ஏற்படுத்தும் தாக்கங்களைக் குறைக்க முற்படுவோம்’ என்ற தொனிப்பொருளில், ஹட்டன் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதிய அலுவலகத்தில், நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, மேற்படி நிறுவனத்தின் அதிகாரிகள், இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளனர்.  

அங்கு தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்கள், ‘தெரிவு செய்யப்பட்ட 12 பெருந்தோட்டங்களைச் சேர்ந்த 236 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின்படி, 201 கணவன்மார் அதாவது 85 சதவீதமானோர், மதுபானம் அருந்துவது கண்டறியப்பட்டது. இவ்வாறான மது பாவனையினால், பிள்ளைகளின் எதிர்காலம் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், ஏனைய துன்புறுத்தல்கள் ஆகிய பிரச்சினைகளுக்கும், அச்சிறுவர்கள் முகங்கொடுத்து வருகின்றனர்’ எனச் சுட்டிக்காட்டினர்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .