2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஜினசேனவின் சூரிய மின் வலு தீர்வுகள்

Gavitha   / 2016 செப்டெம்பர் 29 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது 'மீள்புதுப்பிக்கத்தக்க மின்வலு துறை' உற்பத்தி வரிசையில் வீட்டு மற்றும் தொழிற்சாலைகளுக்கான சூரிய மின் வலு தீர்வுகளை அறிமுகப்படுத்தி ஜினசேன (பிரைவேட்) லிமிட்டெட்,  இலங்கையில் தனது வியாபார தொழிற்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது.

மிகவும் பிரபலமான சர்வதேச வர்த்தக நாமங்களை உபயோகித்து ஜினசேன சூரிய மின் வலு தீர்வுகள் தயாரிக்கப்படுவதுடன், கொழும்பு, பண்டாரவளை, புத்தள, கிராந்துருகோட்டை, பேருவளை, ஏக்கல, அவிசாவளை, தம்புள்ளை, கண்டி, நுவரெலியா, காலி, கதுருவெல, தம்புத்தேகம, அனுராதபுரம், குருணாகல், திருகோணமலை, அம்பாறை, எம்பிலிப்பிட்டிய மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள 19 சேவை மையங்களின் வலையமைப்பினூடாக அவை கிடைக்கப்பெறுகின்றன.

மின் விநியோக இணைப்புடனான தொகுதிகள், மின் விநியோக இணைப்பு அற்ற தொகுதிகள் மற்றும் கலப்பு தொகுதிகள் ஆகியன பிரதானமாக ஜினசேன சூரிய மின் வலு தீர்வுகளில் அடங்கியுள்ளன. மின்விநியோக இணைப்புடனான தொகுதிகள் மின் விநியோகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதுடன், பாவனையாளர் ஒருவர் சூரிய மின் வலு மற்றும் மின் விநியோகத்தின் மூலமாக மின்சாரம் ஆகிய இரண்டையும் உபயோகிக்க முடியும். மின்வலு தேவை அல்லாத சந்தர்ப்பங்களில் சூரிய கலங்கள் மேலதிக மின்சாரத்தை மீண்டும் மின்விநியோகத்திற்கு அனுப்பி வைக்கின்றன.

மின் விநியோக இணைப்பு அற்ற தொகுதிகள் மின்வலுத் தேவையின் 100மூ இனையும் உள்ளடக்குவதற்கு போதுமான மின்சாரத்தை சூரிய கலங்கள் உற்பத்தி செய்ய வேண்டியுள்ளதுடன், மின்விநியோகத்துடன் எவ்விதமான இணைப்புக்களும் கிடையாது. அத்தகைய கட்டடங்கள் பலவற்றிற்கு மாலையில் அல்லது இரவில் அதிகளவிலான மின்சாரம் தேவைப்படுகின்றது. ஆகவே மின் விநியோக இணைப்பு அற்ற தொகுதிகள் பொதுவாக பட்டரி அல்லது மின்பிறப்பாக்கி ஒன்றுடன் இணைத்தே நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

கலப்பு தொகுதிகள் மின் விநியோக இணைப்புடனான தொகுதிகளாக காணப்படுவதுடன், மின்விநியோகம் மற்றும் சூரிய கலங்கள் ஆகிய இரண்டின் மூலமாகவும் மின்னேற்றம் செய்யப்படக்கூடிய பட்டரி இணை ஆதரவு அமைப்பை உள்ளடக்கும் வகையில் தரமுயர்த்தப்பட்டுள்ளது. செயலிழப்பு ஏற்படும் சமயங்களில் இணை ஆதரவு அமைப்பு பட்டரியானது கையால் அல்லது தன்னியக்க முறை மூலம் செயற்படுத்தப்படவேண்டி உள்ளதுடன், அதன் மூலமாகவே இணை ஆதரவு முறை மின்வலு கட்டத்திற்கு விநியோகிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .