2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

JAT நிறுவனத்துக்கு பச்சை லேபல்கள்

Gavitha   / 2016 செப்டெம்பர் 29 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

JAT ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு, மதிப்பிற்குரிய கட்டடங்கள் பட்டய நிறுவனத்தினால் (CIOB) அண்மையில் இரண்டு பச்சை லேபல்கள் (Green Labels) வழங்கப்பட்டுள்ளன.   

இதன்மூலம், மொத்தமாக ஐந்து பச்சை லேபல் சான்றுபடுத்தல்களைப் பெற்றுக்கொண்டுள்ள இலங்கையின் ஒரேயொரு உற்பத்தி நிறுவனம் என்ற சாதனையை JAT ஹோல்டிங்ஸ் நிலைநாட்டியுள்ளது. நிறுவனத்தின் புதுமாதிரியிலான புத்தாக்க கட்டடம் மற்றும் கட்டிட நிர்மாண உள்ளீடுகளுக்கு அங்கிகாரமளிக்கும் விதத்தில் இந்தச் சான்றுபடுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முன்னெடுப்பின் போதும் ‘Earth First’ என்ற பூமிக்கு நட்புறவான கொள்கையை மிகத் தீவிரமாக கடைப்பிடிக்கின்ற நிறுவனத்தின் முக்கிய பெறுமானங்களுக்கு அத்தாட்சியாகவும் இந்த பச்சை லேபல்கள் அமைகின்றன.  

JAT ஹோல்டிங்ஸ் நிறுவனமானது சுவருக்கான பில்லர் மற்றும் சுவர் சாந்து ஆகிய உற்பத்திகளுக்காக கடந்த வாரம் இரண்டு பச்சை லேபல்களை புதிதாகப் பெற்றுக் கொண்டது. இந்நிறுவனம் 2016ஆம் ஆண்டில் இதற்கு முன்னதாக ஏனைய மூன்று பச்சை லேபல்களையும் பெற்றுக் கொண்டது. வர்ணப்பூச்சு (பெயின்ட்) மற்றும் மேற்பூச்சு உற்பத்தி வகைகளின் (பேர்மோகிளேஸ் வெளிப்புற எமல்சன் மற்றும் பேர்மோகிளேஸ் உட்புற எமல்சன்) கீழ் இம் மூன்று லேபல்களும் கிடைக்கப் பெற்றன. அதேநேரத்தில், பேர்மோகிளேஸ் நீரை அடிப்படையாகக் கொண்ட எனாமல் உற்பத்தித் தொடர்களுக்காக ஒரு வெள்ளி விருதையும் தமதாக்கிக் கொண்டது.   

‘எமது அனைத்து உற்பத்திகளும் புதிய புத்தாக்கங்களும் உயர் தர நியமங்களுக்கு அமைவாக காணப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதில் விடாமுயற்சியுடன் இருக்கின்ற அதேவேளை, எமது இயற்கைத் அன்னைக்கு நாம் சமூகப் பொறுப்புள்ளவர்களாக இருக்கின்றோம் என்பதையும் உறுதி செய்து கொள்கின்றோம்’ என்றுJAT ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஈலியன் குணவர்தன தெரிவித்தார். மேலும், ‘ஒரு அணியாக கூட்டிணைந்து நாம் செய்த முயற்சிகள், அங்கிகரிக்கப்பட்டும் பாராட்டப்பட்டும் இருக்கின்றன என்பதை அறியும்போது நாம் மிகவும் பெருமிதம் கொள்கின்றோம்’ என்றும் அவர் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .