2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘பூஜா பூமி’யை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

ஐந்து பரம்பரைகளாக வாழ்ந்து வந்த காணியை “பூஜா பூமி” திட்டத்தின் கீழ் சுவீகரிக்க முயற்சி செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பு - சிலாபம் பிரதான வீதியின் மாதம்பே, தனிவல்ல தேவாலயம் முன்பாக, வியாழக்கிழமை (29) காலை 9.30 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை, அப்பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் எதிர்ப்புக் கோசங்களை எழுப்பியதுடன், எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர். 

“ஐந்து பரம்பரைகளாக வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான காணியை, தனிவல்ல தேவாலயத்தின் தர்மகர்த்தாவான கீர்த்தி சேனாநாயக்கா என்பவர், பூஜா பூமித் திட்டத்தின் மூலம் சுவீகரிக்கத் திட்டம் மேற்கொண்டு செயற்பட்டு வருகிறார்.

1991ஆம் ஆண்டு முதல், இவர் இந்தத் திட்டத்தை மேற்கொண்டுள்ளார். இந்தக் காணியில், சுமார் 23 குடும்பங்களுக்கு மேற்பட்ட முஸ்லிம்கள், பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து  வருகின்றனர். இந்தக் காணிக்கான உறுதியும் உள்ளது. இதனைக் கைப்பற்ற இடமளிக்க முடியாது” என, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .