2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நியூ ஜேர்சி ரயில் விபத்து: ஒருவர் பலி; 114 பேர் காயம்

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜேர்சி மாநிலத்திலுள்ள ரயில் நிலையமொன்றின் மீது, சனநெருக்கடியான காலை நேர மணித்தியாலங்களில், இணைப்பு ரயிலொன்று நேற்று வியாழக்கிழமை (29) மோதியதில், ரயில் நிலையத்தின் ஒரு பகுதிக் கூரை வீழ்ந்த நிலையில், ரயில் நிலைய மேடையில் நின்ற பெண்ணொருவர் கொல்லப்பட்டதுடன், 100க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நியூயோர்க் மாநிலத்தின் ஸ்பிறிங் வல்லே நகரத்திலிருந்து, தனது ஒரு மணித்தியாலப் பயணத்தை முடிக்கும்போதே, ஹொபெக்கன் நகர ரயில் நிலையத்தில், குறித்த ரயில் மோதியுள்ளது.

குறித்த ரயிலின் பொறியியலாளர் காயமடைந்து, வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்த அதிகாரிகள், மேலதிக தகவல்கள் எதனையும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையிலேயே, 114 பேர் காயமடைந்துள்ளதாக நியூ ஜேர்சி மாநில ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி தெரிவித்துள்ளார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .