2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெயநாதன் உயிரிழந்தார்

George   / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன், சண்முகம் தவசீலன்,

வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெயநாதன், இன்று காலை உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர், முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்தில் வைத்து மாரடைப்பு ஏற்பட்டு மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்துள்ளார். அவரது சடலம், மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மரியாம்பிள்ளை அன்டனி ஜெயநாதன் (Mariyampillai Antony Jeyanathan) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும் ஆவார்.

2013ஆம் ஆண்டு நடைபெற்ற வட மாகாண சபையின் முதலாவது தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டார்.

அந்த தேர்தலில் 9,309 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபை உறுப்பினரானார்.

இவர் 2013 ஒக்டோபர் 11 ஆம் திகதி மாகாண சபை உறுப்பினராக முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

அத்துடன், அதே நாளில் இவர் 1ஆவது வட மாகாண சபையின் பிரதித் தலைவராக (பிரதித் தவிசாளர்) முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .