2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நீதிபதியின் வாகனத்தை மறித்தவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

Kogilavani   / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நீதிபதியின் வாகனத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

கொத்மலை பொலிஸ் பிரிவுக்குப்பட்ட லபுக்கலை,  கொண்டக்கலை,பம்பரக்கலை ,வெஸ்ட்வாடோ  மற்றும் நுவரெலியா பம்பரகலை தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வுக்கோரி, வியாழக்கிழமை கண்டி-நுவரெலியா பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக இவ்வீதிவழியான போக்குவரத்து சுமார் இரண்டு மணித்தியாலம் பாதிக்கப்பட்டது.

இவ் வீதியினூடாக பயணித்த அரசாங்க அதிகாரிகள், உரிய நேரத்தில் தமது பணிகளுக்குச்  செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதேவேளை, கண்டியிலிருந்து பயணித்த நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ருவான் த சில்வாவின் வாகனத்தையும் மறித்து, தொழிலாளர்கள், லபுக்கலை பகுதியில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனால் நீதவானுக்கு உரிய நேரத்தில் நீதிமன்றத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், அன்றைய தினம்  நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாகவும் இதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .