2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அமைக்கப்படும் வீடுகளை அதிகாரிகள் பார்வையிட்டனர்

Niroshini   / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மீள்குடியேற்ற அமைச்சின் வீடமைப்புத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கிண்ணையடியில் அமைக்கப்பட்டு வரும் வீடுகளை மாவட்ட அரசாங்க அதிபரின் அறுவுறுத்தலுக்கமைய மாவட்ட செயலக அதிகாரிகள் நேற்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இக்கிராமத்துக்கு விஜயம் செய்த மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன் மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா மாவட்ட செயலக பொறியியலாளர் ஆகியோருடன் வீட்டுத்திட்ட கட்டுமான வேலைகளைப் பார்வையிட்டனர்.

இதன்போது, பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் மற்றும் பிரதேச  செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளரும் பிரசன்னமாகியிருந்தனர்.

மீள்குடியேற்றப் பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் சகல வீடுகளும் ஒக்டோபர் 30ஆம் திகதிக்கு முன்னாள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, வீட்டு வேலைகளைத் துரிதப்படுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலில் இக்கள விஜயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கறுவாக்கேணி, வாலைவாடி, மீரவோடை  ஆகிய கிராமங்களிலும் வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,726 வீடுகள் மீள்குடியேற்ற அமைச்சின் வீடமைப்புத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், இவ் வீடுகளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் திறந்துவைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மீள்குடியேற்ற அமைச்சினால் 2016 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வீட்டுத்திட்ங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இதன்படி, கோரளைப்பற்று வடக்கில் 73 வீடுகள் கோரளைப்பற்று மத்தியில் 35 வீடுகள் கோரளைப்பற்று 187 வீடுகள் கோரளைப்பற்று தெற்கு 310 வீடுகள் ஏறாவூர்பற்று  43 வீடுகள் ஏறாவூர் நகர் 08 வீடுகள் மண்முனை வடக்கு 69 வீடுகள் காத்தான்குடி 14 வீடுகள் மண்முனைப்பற்று 45 வீடுகள் மண்முனை தென்nருவில் பற்று 80 வீடுகள் போரதீவுப்பற்று 05 வீடுகள் மண்முனை தென் மேற்கு 20 வீடுகள் மண்முனை மேற்கு 44 வீடுகள் என முழுமையாக வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. மேலும் பகுதியளவில் சேதமடைந்த 726 வீடுகளும் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த 1726 வீடுகளில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்கங்களுக்கு 244 வீடுகளும் விசேட தேவையுடையவர்களுக்கு 41 வீடுகளும் காணாமல் போனவர்களது குடும்பங்களுக்கு 45 வீடுகளும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு 137 வீடுகளும் இது தவிரவும் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்களுக்கு மிகுதி வீடுகளும் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

இவ்வீடுகள் தவிரவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் மேலும் 600 வீடுகள் அமைப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இவை மண்முனை மேற்கு மண்முனை தென் மேற்கு போரதீவுப்பற்று ஏறாவூர் பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தலா 150 வீதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X