குடும்பஸ்தர் மீது கத்திக்குத்து: சந்தேகநபர் தலைமறைவு
06-10-2016 01:53 PM
Comments - 0       Views - 84

-செல்வநாயகம் கபிலன்

ஏழாலை வடக்குப் பகுதியில் புதன்கிழமை (05) மாலை குடும்பஸ்தர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

தெல்லிப்பழை, கட்டுவன் மேற்கைச் சேர்ந்த சிவஞானரத்தினம் சிவானந்தம் (வயது 39) என்பவரே படுகாயமடைந்தார்.

மைத்துனர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர், மற்றையவரின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்தவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

கத்தியால் குத்தியவர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

"குடும்பஸ்தர் மீது கத்திக்குத்து: சந்தேகநபர் தலைமறைவு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty