சாகித்திய விழாவும் கலைஞர்கள் கௌரவிப்பும்
07-10-2016 04:21 PM
Comments - 0       Views - 35

-பி.எம்.எம்.ஏ.காதர்

கல்முனை பிதேச செயலகத்தின் 2015ஆம் ஆண்டுக்கான பிரதேச சாகித்திய விழாவும் கலைஞர்கள் கௌரவிப்பும் பரிசளிப்பும் முனைமலர் வெளியீடும் புதன்கிழமை மாலை மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மட் கனி தலைமையில் மிகவும் நடைபெற்றது.

இந்த விழாவில் கவிதைகள், கட்டுரைகள் ஆசிச்செய்திகள் பிரதேச எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய நூல் ஒன்று  'முனைமலர்' என்ற பெயரில் பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மட் கனியால் வெளியிட்டு வைக்கப்பட்து உதவிக் கல்விப் பணிப்hளர் கலாநிதி சத்தார் எம் பிர்தௌஸ் நூலை அறிமுகம் செய்து வைத்தார்.   

கலாசார உத்தியோகத்தர் அஷ்செய்க் றஸ்மி எம்.மூஸாவின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்த விழாவில் ஊடகத்துறைக்காக ஊடகவியலாளர்களான கல்முனை ஏ.பி.எம்.அஸ்ஹர், மருதமுனை ஜெஸ்மி எம்.மூஸா, இலக்கியத் துறைக்காக மருதமுனை கவிஞர்களான எம்.எச்.ஏ.கரீம், ஏ.எல்.இல்முன் ஹூசைன் (ஜீனாரஜ்) பாடகர் எஸ்.எம்.கமால்தீன், சமூக சேவைக்காக ஏ.எல்.கமறுத்தீன், கிராமியக் கலைக்காக கல்முனைக்குடி ஐ.எல்.நெய்னா முகம்மட், எம்.எம்.முஹம்மத ஹசினி ஆகியோர் அதிதிகளால் பொன்னாடை போர்த்தி விருதும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
பிரதேச சாகித்திய விழாவையொட்டி நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

"சாகித்திய விழாவும் கலைஞர்கள் கௌரவிப்பும்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty